2022 ஆம் நிதி ஆண்டிற்கான 76 ஆவது வரவு - செலவுத் திட்டம்

நேரடி வலைப்பதிவு
 • 2021-11-22 16:57:06

  வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 

 • 2021-11-22 13:54:17

  வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின்  2022 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு  இடம்பெறவுள்ளது.  

  https://www.virakesari.lk/article/117599

 • 2021-11-12 17:30:25

 • 2021-11-12 16:55:59

  இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படாத அனைத்து வாகனங்களையும் விடுவிக்க நடவடிக்கை  இவ்வாறு விடுவிப்பதற்குரிய வரி, அபராதப் பணம் அறவிடப்பட்ட பின்பே விடுவிப்பு

 • 2021-11-12 16:55:28

  சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

 • 2021-11-12 16:54:21

  கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:53:50

  பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையங்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:53:10

  நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்த நீதிமன்ற  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:51:59

  விளையாட்டு அபிவிருத்திக்காக  3,000 மில்லியன் ரூபா  ஒதுக்கீடு : நிதி அமைச்சர்

 • 2021-11-12 16:51:14

  சுகாதாரம், சுதேச மருத்துவத்தை அபிவிருத்தி செய்ய 5,000 மில்லியன் ரூபா  ஒதுக்கீடு

 • 2021-11-12 16:50:32

  கிராமிய உட்கட்டமைப்பு, பொது சேவைகளுக்காக 5,300 மில்லியன்  ரூபா  ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:49:10

  கிராமிய உட்கட்டமைப்பு, பொது சேவைகளுக்காக 5,300 மில்லியன்  ரூபா  ஒதுக்கீடு

 • 2021-11-12 16:48:51

  வனஜீவராசிகள் பாதுகாப்புக்காக  1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 • 2021-11-12 16:47:09

  வனப்பாதுகாப்புக்காக 2,000 மில்லியன் ரூபா  ஒதுக்கீடு

 • 2021-11-12 16:46:16

  விபத்துக்குள்ளாகும் வாகன உரிமையாளர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிட தீர்மானம். 

 • 2021-11-12 16:44:34

  மதுபான வரியை அதிகரிக்க தீர்மானம், இதனால் 25 வீத வருவாயை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள தீர்மானம் : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:37:15

 • 2021-11-12 16:36:13

  லயன் வீடுகளை அகற்றி தனி வீடுகள் அமைக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:34:56

  அடுத்த மூன்று ஆண்டுகளில் லயன் வீடுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் : நிதி அமைச்சர்

 • 2021-11-12 16:29:09

  அதிபர், ஆசிரிர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு 30 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு : நிதி அமைச்சர்

 • 2021-11-12 16:24:43

  வெவ்வேறு காரணிகளுக்காக வெவ்வேறு காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக மேலும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 • 2021-11-12 16:24:01

  பெளத்த விகாரைகள் பராமரிப்பு மற்றும் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 • 2021-11-12 16:23:03

  2015-2019 ஆண்டு காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்குட்படுதப்பட்ட நபர்களுக்கு நட்டஈடு வழங்க 100 மில்லியன் ஒதுக்கீடு

 • 2021-11-12 16:21:56

  மக்கள் சேவைக்காக அரச  ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொடுக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 16:21:18

  பெண் வியாபாரிகளுக்கான ஊக்குவிப்பு நடவடிகைகளுக்கும் கிராமிய உற்பத்தியை விநியோகிக்கும் வீட்டு சந்தை முறைமையை உருவாக்க  15 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

 • 2021-11-12 16:20:08

  கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கும் ஆரோக்கிய உணவுப்பொதியை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 • 2021-11-12 16:19:22

  விசேட தேவையுடையோர்  மற்றும் வயதானவர்களின் நலன்களுக்காக ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு : நிதி அமைச்சர்

 • 2021-11-12 16:18:37

  தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி/ ஔிபரப்பு உரிமங்களை ஏலத்தில் வழங்க நடவடிக்கை

 • 2021-11-12 16:17:42

  புதிய விசேட பண்ட வரி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு

 • 2021-11-12 16:17:17

  வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 • 2021-11-12 16:16:52

  கிராமிய வீடமைப்புக்கு மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்

 • 2021-11-12 16:16:27

  அனைவருக்கும் குடிநீர் வசதி ! 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 மில்லியன் ரூபா   ஒதுக்கீடு

 • 2021-11-12 16:15:55

  திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபா

 • 2021-11-12 16:15:19

  புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்கல்

 • 2021-11-12 16:14:58

  வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம்

 • 2021-11-12 16:13:09

  புகையிரத திணைக்களத்தால் திறம்பட பயன்படுத்தப்படாத காணிகள்  கலப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்தல்

 • 2021-11-12 16:12:40

  சேதனப் பசளை உற்பத்தித் திறன்   கிராமிய அளவில் அதிகரிக்கப்படும்

 • 2021-11-12 16:12:10

  இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : இறப்பர் சார்ந்த உற்பத்தி தொழில் ஊக்குவிப்பு  

 • 2021-11-12 16:11:36

  இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மையமாக மாற்ற நடவடிக்கை

 • 2021-11-12 16:11:02

  இளைஞர்களை வேலை தேடுபவர்களுக்கு பதிலாக தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டம் உருவாக்கம்.

 • 2021-11-12 16:10:38

  ஆடைக் கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை

 • 2021-11-12 16:10:06

  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிகிறேன்

 • 2021-11-12 16:09:46

  அரச நிறுவனங்களின் செலவீனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் தனித் தனியாக ஒதுக்கப்படும்

 • 2021-11-12 16:09:15

  ஓய்வூதிய முரண்பாடுகளைக்களைய புதிய சம்பள அமைப்பு

 • 2021-11-12 16:08:52

  நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை விரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

 • 2021-11-12 16:08:18

  நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.

 • 2021-11-12 16:07:56

  இலங்கையில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்.

 • 2021-11-12 16:07:23

  சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய அறிவியல் முறைமை

 • 2021-11-12 16:06:02

  நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்த எதிர்பார்ப்பு : கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பு.

 • 2021-11-12 16:05:31

  அரச நிதி கொள்கை வகுக்கும் போது, இரண்டாவது முன்னுரிமை சேமிப்பின் பால் வழிநடத்துவதாகும்

 • 2021-11-12 16:05:15

  மூலதன உதவிகளை வழங்கி அரச மற்றும் தனியார் துறையினரின் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான சாளரங்கள் திறப்பு

 • 2021-11-12 15:45:57

  நாடு முடக்கப்பட்ட காலத்தில் வருமானத்தை இழந்த தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதி அமைச்சர்

 • 2021-11-12 15:43:18

  கடந்த காலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக அவர்களுக்கு சலுகைகளை வழங்க 700  மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 15:42:32

  பாடசாலை மூடப்பட்ட காரணத்தினால் பாடசாலை வேன், பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை : அதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 • 2021-11-12 15:15:53

  2 இலட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சகல ஆண்டிலும் செல்வார்கள், கொவிட் நெருக்கடி காரணமாக அடுத்த ஆண்டில் 1300000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 15:14:26

  நிலையான முதலீட்டுக் குழுக்களை உருவாக்கவும் ஆலோசனை : நிதி அமைச்சர்

 • 2021-11-12 15:13:04

 • 2021-11-12 15:12:50

  தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு விசேட வேலைத்திட்டம் : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 15:10:32

  அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் : நிதி அமைச்சர்

 • 2021-11-12 15:07:42

  ஆயுர்வேத வைத்திய மத்திய நிலையங்களை புதிதாக உருவாக்கவும் மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை

 • 2021-11-12 15:04:17

  இலங்கையில் தரமான மருந்துகளை உருவாக்கும் வகையில் தனியார் துறைக்குத் தேவையான வசதிகள் உருவாக்கிக்கொடுக்கப்படும்.

 • 2021-11-12 14:59:35

  புதிய வியாபாரம் உருவாக்கப்படும் வேளையில் வியாபார பதிவுக் கட்டணம் அறவிடப்படமாட்டாது : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 14:57:55

  முச்சக்கரவண்டி ஊழியர்கள் அதிகரித்துள்ளனர், அவர்களின் பிரச்சினைகள் குறித்த நெருக்கடிகளை தீர்க்க முச்சக்கரவண்டி நலன்புரி ஆணைக்குழு உருவாக்கப்படும்

 • 2021-11-12 14:56:36

  தொலைபேசி, இணையத் தடைகள் குறித்த முறைப்பாடுகள் குறைத்துள்ளன . சகல பகுதிக்கும் கிடைக்கும் விதமாக வேகமான இணைய தொடர்பாடலை உருவாக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும். (ஜி-5) தொழிநுட்பம் சகல பகுதிகளுக்கும்

 • 2021-11-12 14:54:10

  தேசிய வருமான வரித் திணைக்களத்தின் மூலமாக வரி செலுத்தாதவர்களிடம் இருந்து முறையாக வரிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும். அதற்கான சட்டம் உருவாக்கப்படும்

 • 2021-11-12 14:53:23

  அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை 65 வயதுவரை நீடிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது : நிதி அமைச்சர்

 • 2021-11-12 14:50:34

  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள 5 ஆண்டுகள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் போதும் என்ற யோசனையை 10 ஆண்டுகளாக அதிகரிக்க யோசனை : ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட சகல துறைகளுக்கும் பொருந்தும்

 • 2021-11-12 14:49:49

  அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதத்திற்கு ஐந்து லீட்டரால் குறைக்கவும், தொலைபேசி செலவை 25 வீதத்தால் குறைக்கவும், மின்சாரத்தை சூரிய காலத்தினால் நிரப்பவும் யோசனை ஒன்றினை முன்வைக்கின்றேன்

 • 2021-11-12 14:48:44

  இப்போது நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்களை தவிர ஏனைய புதிய அரச காரியாலயங்கள் உருவாக்குவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்த யோசனை 

 • 2021-11-12 14:47:43

  நாட்டின் சகல பிரஜையும் தமக்கு ஏற்ற அளவில் சேமிப்பை உருவாக்க வேண்டும், அதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 14:46:56

  2022 வரவு - செலவு திட்டத்தை உருவாக்கும் வேளையில் சௌபாக்கிய நோக்கு திட்டத்தை முழுமையாக கவனத்தில் கொண்டே வரையப்பட்டுள்ளது.

 • 2021-11-12 14:46:17

  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவருக்கான எடுத்துக்காட்டாக உள்ளார். வரவு -செலவு திட்டத்தில் அதற்கான சிறந்த வெளிப்பாடு ஏற்பட்டுள்ளது.

 • 2021-11-12 14:31:49

  ஏற்றுமதி தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சௌபாக்கிய நோக்கு திட்டத்தில் அதற்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

 • 2021-11-12 14:30:26

  கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம்.

 • 2021-11-12 14:28:56

  2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.

 • 2021-11-12 14:27:42

  வரவு - செலவுத்திட்டத்தின் அதிக செலவு - கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 14:25:47

  சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது , வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது.

 • 2021-11-12 14:24:29

 • 2021-11-12 14:23:19

  உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது.

 • 2021-11-12 14:20:43

  வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும் : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 14:19:35

  வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.

 • 2021-11-12 14:18:49

  சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

 • 2021-11-12 14:17:13

  ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீட்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.

 • 2021-11-12 14:16:22

  ஆசிய கண்டத்தின் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாடாகவே இலங்கையை பலர் அடையாளப்படுத்துகின்றனர்.

 • 2021-11-12 14:15:39

  கொவிட் சவால்களை வெற்றிகொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டை நீண்ட காலம் முடக்க நேர்ந்தது. மூன்றாம் அலையை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேர்ந்தது.

 • 2021-11-12 14:14:44

  தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை : நிதி அமைச்சர் 

 • 2021-11-12 14:13:40

  இயற்கையை அளவுக்கு அதிகமாக நேசித்த இனம் என்ற ரீதியில் எம்மைவிட வேறு எவரும் இருக்க மாட்டார்கள் - நிதி அமைச்சர்

 • 2021-11-12 14:11:08

  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட பாராளுமன்ற அதிகாரம் எம்மிடத்தில் உள்ளது, அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமை தாங்குகின்றார்.

 • 2021-11-12 14:09:24

  500 பில்லியனுக்கும் அதிகமான பில்லியன் ரூபா வருமானம் இழந்த நாடாக உள்ளோம். மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நாடாக மாற்றம் கொண்டுள்ளோம் 

 • 2021-11-12 14:08:16

  கொரோனா வைரஸ் தொற்றில் நாடாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பூகோள சவால்கள் என சகல விதத்திலும் நாம் சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம் - நிதி அமைச்சர் பஷில்

 • 2021-11-12 14:06:52

  எனது கன்னி வரவு - செலவு திட்டம் இதுவாகும் - நிதி அமைச்சர் சபையில் அறிவிப்பு

 • 2021-11-12 14:06:24

  பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகின்றார்.

 • 2021-11-12 14:06:08

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபைக்கு வருகை தந்துள்ளார்.

 • 2021-11-12 14:05:19

  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சபைக்கு வருகை தந்துள்ளார்.

 • 2021-11-12 14:03:10

  இலங்கையின் 76 ஆவது வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கா நிதியமைச்சர் பஷில்  ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு வருகை

 • 2021-11-12 12:35:03
  • பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.

  • இலங்கையின் 76 ஆவது வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பஷில்  ராஜபக்ஷ  நிதியமைச்சர் என்ற வகையில் முதல் முறையாக சமர்ப்பித்து  உரை நிகழ்த்தவுள்ளார்.

  • இன்று சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமாகும். 

  • இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு 250,534 கோடியே 6,558,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

  • வரவு - செலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டதான  2,50,534 கோடியே 6,558,000 ரூபா அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

  • இந்த வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை 13  ஆம் திகதி சனிக்கிழமை.15 ஆம் திகதி திங்கட்கிழமை,  16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 17 ஆம் திகதி புதன்கிழமை, 19  ஆம் ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 20 ஆம் திகதி சனிக்கிழமை, 22 ஆம் திகதி திங்கட்கிழமைகளில்  இடம்பெற்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான  வாக்கெடுப்பு நடத்தப்படும்.

  • வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை மீதான விவாதங்களுக்கு. 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல்   10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான ஞாயிறு தவிர்ந்த 16 நாட்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன. 

  • மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

  • வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இன்று வெள்ளிக்கிழமை முதல் வரவு-செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

  • வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படாது.

  • வரையறுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளனர்.

  • வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்காக விசேட விருந்தினர்கள் கலரி திறக்கப்பட்டிருக்கும். 

  • வரவுசெலவுத்திட்ட உரையின் பின்னர் நிதி அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்படும் சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரம் இடம்பெறும். 

  • மேலும் கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

  • இதற்கமைய வரவு - செலவுத்திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழியிலான ஒளிபரப்புக்கு தனியான கட்டமொன்று ஒதுக்கப்பட்டிருக்கும்.