22.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 09ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-03-23 07:35:38

சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி மாலை 4.13 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. பூரம் நட்சத்திரம் மாலை 5.09 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்ததிதி, சித்தாமிர்தயோகம் கீழ் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம் அவிட்டம் சுபநேரங்கள் காலை 7.30 – 8.30 பகல் 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்). ஹோலிப் பண்டிகை. நாளை சந்திர கிரகணம் இலங்கை, இந்தியாவில் தோற்றாது.

மேடம் : புகழ், தேர்ச்சி

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : பணம், பரிசு

துலாம் : நலம், ஆரோக்கியம்

விருச்சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : முயற்சி, முன்னேற்றம் 

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : சுபம், மங்களம்

மீனம் : உயர்வு, மேன்மை

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த “அமலனாதிபிரான் பாசுரம் 06” துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம், கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே. பொருளுரை – துண்டான வெண்ணிலாவை சடையில் உள்ளசிவன் பத்மாசுரனுக்கு வரம் கொடுத்துவிட்டு, அவன் வரத்தை பரிட்சிக்க சிவன் தலையில் கைவைக்க துரத்த தாங்கள் சிவன் துயர்தீர்க்க மோகினியாக வந்து அசுரனை அழித்தவர். அழகிய சிறகுகள் உடைய வண்டுகள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் உறைகின்றவர். அழகிய மணவாளர் எழுவகைப்பட்ட பர்வதங்களையும் பூமியையும் அண்டங்களையும் அமுது செய்தருளிய தங்களின் திருக்கழுத்தின் அழகு, இதன் வழியாகத்தானா அண்டங்கள் போனது” என்று அதிசயிக்க வைத்து ஆண் கொண்டது!   (ஆழ்வார் திருவடிகளே சரணம்) நாளை பகவானின் சிவந்த வாயழகைப் பார்ப்போம்)

ராகு கேது, கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  2 – 1 – 5 – 6

பொருந்தா எண்கள்:  7 – 4 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)