21.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 8 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-03-21 07:59:23

சுக்கில பட்ச திரயோதசி திதி பகல் 2.54 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி மகம் நட்சத்திரம் மாலை 3.16 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம் சிரார்த்த திதி அதிதி. மரணயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்தராடம், திருவோணம். சுபநேரங்கள் காலை 6.30– 7.30, 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) இன்று மகம் நட்சத்திரம் சூரிய வழிபாடு காயத்ரி மந்திர ஜெபம் நன்று.

மேடம்: நலம், ஆரோக்கியம்

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்: உதவி, நட்பு

கடகம்: ஆர்வம், திறமை

சிம்மம்: ஆக்கம், முன்னேற்றம்

கன்னி: தடை, தாமதம்

துலாம்: பக்தி, ஆசி

விருச்சிகம்: புகழ், சாதனை

தனுசு: நட்பு, உதவி

மகரம்: பணிவு, செல்வாக்கு

கும்பம்: வெற்றி, யோகம்

மீனம்: புகழ், பெருமை

திருப்பாணாழ்வார் அருளிய “அமலனாதி பிரான்” பாசுரம் 05, “பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான். வைத்ததன்றி என்னுள் புகுந்தான். கோர மாதவம் செய்தான். கொல் அறியேன். அரங்கத்தம்மான் திருவார மார்வதன்றோ அடியேனை ஆட்கொண்டதே”  பொருளுரை; என் முற் பிறவிகளின் பாவங்களின் சுமையைக் களைந்தவன் ஸ்ரீ ரங்கநாதன். அது மட்டுமல்லாமல்  அடியேனைத் தன் பக்தனாகவும் ஆக்கி என் நெஞ்சிலும் புகுந்துவிட்டான். இத்தகைய பாக்கியத்தை அடைவதற்கு சென்ற பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. திருமகளும் முத்தாரமும் வீற்றிருக்கும் பரந்தாமனின் திருமார்பின் அழகல்லவா என்னை அடிமைப்படுத்திவிட்டது” (ஆழ்வார் திருவடிகளே சரணம்) நாளை திருக்கழுத்தின் அழகை ஆழ்வார் வர்ணிக்கின்றார்.

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள்: பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)