உங்கள் பலத்தோடு மட்டும் போராடுங்கள் பிறரின் பலவீனத்தோடு அல்ல..இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08-11-2018)..!

Published on 2018-11-08 12:23:46

08.11.2018 விளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 22 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 10.03 வரை. அதன் மேல் துவி­தியை திதி. விசாகம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.17 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை, பிர­தமை. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரணி. சுப­நேரம் 10.45 – 11.45, ராகு காலம் 1.30– 3.00 எம­கண்டம் 6.00– 7.30,  குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம் –தைலம்) கோவர்த்­தன விரதம். கந்­த­சஷ்டி விர­தா­ரம்பம்.

மேடம் : அன்பு, இரக்கம்

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம் : ஆக்கம், நிறைவு

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : ஓய்வு, அசதி

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : புகழ், பெருமை

“ஸ்ரீ வைஷ்­ணவம்” திருவாய் மொழி என்­பது 

நம்­மாழ்வார் பக்­திப்­பெ­ருக்கால் தோன்­றிய மஹா பிர­பந்தம். ஆழ்­வார்­க­ளுக்­கெல்லாம் நடு­நா­ய­க­மாக திகழ்ந்­தது. இவர் அவ­தாரம் வேத செந்­த­மிழால் உரைத்த இவர் பாசு­ரங்­களை அனு­ப­விப்போம். திருவாய் மொழியில் முதற்­பதி முதல் திருவாய் மொழி ‘உயர்­வள உயர்­நலம் உடை­யவன் எவ­னவன் மயர்­வற மதி­நலம் அயர்­வறு மம­ர­வர்கள் அதி­பதி யவ­னவன் துய­ரறு சுட­ரடி தொழ தெழன் மன்னே” தன்னை விட உயர்த்­தி­யில்­லாத கல்­யாண குணங்­களை உடைய ஞானத்­தையும் பக்­தி­யையும் அடி­யே­னுக்கு  கிருபை பண்­ணிய துயர்­அறப் பெற்ற ஜோதி­ம­ய­மான திரு­வ­டி­களை வணங்கி நீ கடைத்­தேறக் கடவை. (தொடரும்) 

சனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)