"தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்: தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21-10-2018)

Published on 2018-10-21 09:31:05

21.10.2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 4ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

சுக்கில பட்ச துவாதசி திதி முன்னிரவு 9.16 வரை. அதன் மேல் திரயோதசி திதி. சதயம் நட்சத்திரம் காலை 6.21 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்த யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நடசத்திரம் மகம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45, பி.ப. 1.30 – 3.00, ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) கோத் துவாதசி– சூரிய வழிபாடு,கண்ணூறு கழித்தல் நன்று.

மேடம் : அன்பு, மகிழ்ச்சி

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : ஆர்வம், திறமை

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : இன்பம், மகிழ்ச்சி

விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : நிறைவு, பூர்த்தி

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : விவேகம், வெற்றி

“விஷ்ணு புராணம்” அப்ராக்குதத் திருமேனியுடையவன். அவிகராய சுத்தாய நித்யாய பரமாத்மனே “ஸதைகரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஸ்ணவே” விகாரமில்லாதவனாய், சுத்தனாய், நித்யனாய், பரமாத்வனாய் எப்பொழுதும் எல்லோரையும் ஜெயிப்பவனான விஷ்ணு வுக்கு நமஸ்காரம்.

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ் எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)