"இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19-10-2018)..!

Published on 2018-10-19 11:38:06

19.10.2018 விளம்பி  வருடம் ஐப்­பசி மாதம்  02 ஆம் நாள்   வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச தசமி திதி  மாலை 5. 57 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. அவிட்டம் நட்­சத்­திரம்  பின்­னி­ரவு 4.06 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. தசமி.  சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் – மூலம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30,  மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் –வெல்லம்). விஜ­ய­த­சமி, வித்­யா­ரம்பம், மானம்பூ உற்­சவம். 

மேடம் : புகழ், பெருமை 

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : அன்பு, இரக்கம் 

கடகம் :  பரிவு, பாசம்

சிம்மம் : சோர்வு, அசதி  

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் :  அச்சம், பகை

விருச்­சிகம் : நோய், வருத்தம்

தனுசு : சினம், பகை 

மகரம் :  தனம், சம்­பத்து

கும்பம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

மீனம் : போட்டி, ஜெயம் 

 ‘விஷ்ணு புராணம்’ அவ­தா­ரங்கள் தோறும் திவ்ய தம்­ப­திகள் ‘ராக­வத்வே பவத் ஸீதா ருக்­க­மணி கிருஷ்ண ஐந்­மதி’ பகவான் ராக­வ­னாக அவ­த­ரித்த போது பிராட்டி சீதை­யா­கவும் கண்­ண­னாக அவ­த­ரித்த போது ருக்­ம­ணி­யா­கவும் மற்ற அவ­தா­ரங்­க­ளிலும் பக­வானைப் பிரி­யாது இருக்­கிறார். விஷ்­ணுவின் தேகத்­துக்கு தகுந்­தாற்போல் தேகத்தை அமைத்துக் கொள்­கிறார். (விஷ்ணு புராணம் தொடரும்)

 (“நெஞ்­சிலே  பாய­வரும் ஆயிரம் ஈட்­டி­க­ளுக்கு நான் அஞ்­சு­வ­தில்லை. ஆனால் ஓர் அறி­ஞனின் பேனா முனைக்கு பயப்­ப­டு­கின்றேன்”– நெப்­போ­லியன். )

சூரியன், ராகு  கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:   1– 5  

பொருந்தா எண்:       8

அதிர்ஷ்ட வர்ணங்கள் :   மஞ்சள், வெளிர் நீலம்       

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)