"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-10-2018)..!

Published on 2018-10-16 09:18:47

16.10.2018 விளம்பி  வருடம் புரட்­டாதி மாதம்  30ஆம் நாள்  செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி  பகல்11. 58 வரை. அதன் மேல்  அஷ்­டமி திதி. பூராடம் நட்­சத்­திரம்.  முன்­னி­ரவு 8.35 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. அஷ்­டமி. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்– மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30 வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் –பால்). பத்­ர­காளி அவ­தார தினம். பத்­தி­ரிகா பூஜா. 

மேஷம் : செலவு, விரயம் 

இடபம் : லாபம், ஆதாயம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம் 

கடகம் :  புகழ், பெருமை

சிம்மம் : பகை, விரோதம் 

கன்னி : பாராட்டு, நற்­செய்தி

துலாம் :  நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : உயர்வு, மேன்மை 

மகரம் : அச்சம், பகை 

கும்பம் : உதவி, நட்பு 

மீனம் : வரவு, லாபம் 

‘விஷ்ணு சகஸ்ர நாமம்’ ஸாம­கா­யந-– முக்தன் தன்­னை­ய­டைந்து ஸாம­கானம் செய்­யும்­படி செய்­பவன்.

பாப­நா­சன– பக்­தனின் பாவங்­களைப் போக்­கு­பவன். சங்­கு­சக்­கர ரதாங்க பாணி– சங்கு சக்­க­ரத்தைத் தரித்­தவன்.

ஸர்வ பிர­ணா­யுத பாணி– துன்­பங்­களைத் துடைக்கும் ஆயு­தங்­களைத் தரித்­தவன். விஷ்ணு சகஸ்ர நாமம் முற்­றிற்று. நாளை பதினெண் புரா­ணங்­களில் சிரேஷ்­ட­மான

விஷ்­ணு­பு­ராணம்.(“நல்­லொ­ழுக்கம் என்­பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்­ம­திப்­பாகும்” – அரிஸ்­டாட்டில்)

கேது, சூரியன்  கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1– 2– 5  

பொருந்தா எண்கள்:  7– 8-- 

அதிர்ஷ்ட வர்ணங்கள்:   மஞ்சள், வெளிர்பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)