"நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (15-10-2018)..!

Published on 2018-10-15 10:45:43

15.10.2018 விளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 29 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி பகல் 10.17 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. மூலம் நட்­சத்­திரம் மாலை 5.17 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. ஸப்­தமி. சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 3.00 – 4.00, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்). 

மேடம் : சிக்கல், சங்­கடம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : சிரமம், தடை

சிம்மம் : தெளிவு, அமைதி

கன்னி : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : விரயம், செலவு

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : அன்பு, பாசம்

தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேச பெருமாள் ஆல­யத்தில் மாலை ஸ்ரீநி­வாஸ திருக்­கல்­யாண வைபவம். “விஷ்ணு சகஸ்ர நாமம்” ஜகந் – தன்னை அனு­ப­விப்­ப­தற்­காக கரண களே­ப­ரங்­களைப் படைப்­பவன். ஜகன் மாதி – ஜனங்­களின் பிறப்­புக்கு நிமித்த கார­ண­மா­னவன். பீம­ப­ராக்­கி­ரம – பகை­வர்­க­ளுக்கு பய­ம­ளிப்­பவன். ஆதார நிலய – பிரு­க­லா­தனைப் போன்று பக்­தர்­க­ளுக்கு ஆதா­ர­மா­னவன். தாதா– உப­தே­சிக்கும் ஆசா­ரியன் புஸ்­ப­ஹகள் – புஸ்ப மலர்ச்சிப் போன்று மிரு­து­வான சுபா­வ­முள்­ளவன். ப்ராஜாகா – பக்­தர்­களை காக்கும் பொருட்டு விழித்­தி­ருப்­பவன். (தொடரும்)

(“அர­சி­யலில் வெற்றி பெறு­ப­வர்கள் வாழ்க்­கையை தொலைத்து விடு­கின்­றனர்.”)

சுக்­கிரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 3, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)