"முழுக்க முழுக்க சக்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும்....": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 12.10.2018)...!

2018-10-12 10:10:59

12.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

சுக்கிலபட்ச திரிதியை திதி காலை 7.48 வரை. பின்னர் சதுர்த்தி திதி. விசாகம் நட்சத்திரம் பகல் 1.04 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. சதுர்த்தி. சித்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 

4.45 – 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எம 

கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் –

வெல்லம்). சதுர்த்தி விரதம், விநாயகப்பெரு மானை வழிபடல் நன்று. காற்றழுத்த தாழ்வு மண்டலம். சுக்கிரன், புதன் ஏக ராசியில் சஞ்சாரம். கன மழை வாய்ப்பு.

மேடம் : லாபம், லக்ஷ்மீகரம்

இடபம் : அச்சம், பகை

மிதுனம் : உதவி, நட்பு

கடகம் : வரவு, லாபம்

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : விரயம், செலவு

விருச்சிகம் : ஆதாயம், லாபம்

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் : அசதி, வருத்தம்

கும்பம் : கவலை, கஷ்டம்

மீனம் : தடை, தாமதம்

“விஷ்ணு சகஸ்ரநாம பாஸ்யம்” ஷர்வரீகர – கஜேந்திரனை காக்க பஞ்சாயுதங்களை கைகளில் ஏந்தியவன். அக்ரூர – ஈரநெஞ்சம் படைத்தவன். பேஷய – கஜேந்திரனை காக்க பஞ்ச ஆயுதங்களை கைகளில் ஏந்தியவன். வீதபய – கஜேந்திரனின் பயம் துடைத்தவன். வீரஹா – மிருத்யுவை விலக்கியவன். ரூப – எண்ணற்ற ரூபங்களை உடையவன். பூர்புவ – எண்ணற்ற ரூபங்களை உடையவன். (விஷ்ணு சகஸ்ர நாமம் தொடரும்) 

(“பாவத்திற்கு பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைப்பிடி பொய்”)

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண் : 9

பொருந்தா எண்கள் : 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்    : பச்சை, மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right