"மனம் ஒரு குரங்கு முயன்றால் வசப்படுத்தலாம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03-08-2018)..!

Published on 2018-08-03 11:41:55

03.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம்18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி காலை 8.43 வரை. பின்னர் ஸப்தமி திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 11.50 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி. அமிர்தயோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்தம் சித்திரை. சுபநேரங்கள் காலை 09– 10.15, மாலை  4.45– 5.45. ராகு காலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30 –9.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) ஆடிப் பெருக்கு விழா.

 மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : ஆக்கம், நிறைவு

மிதுனம் : இலாபம், லஷ்மீகரம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : பிரயாணம், அசதி

கன்னி : சினம், பகை

துலாம் : முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம் : சுபம், மங்கலம்

தனுசு : பேராசை, நஷ்டம்

மகரம் : நன்மை, யோகம்

கும்பம் : உற்சாகம், மகிழ்ச்சி

மீனம் : கோபம், பகை

''கௌ ஷிதகி உப நிஷத்" இவ்வுப நிஷத்தின் முதல் அத்தியாயத்தில் சமஸ்ஸார மார்க்கமாகிற தூமாதி மார்க்கத்தை முதலில் சொல்லி, மோட்ச்ச மார்க்கமாகிற அர்ச்சிராதி மார்க்கத்தை உபதேசிக்கின்றது. இதனையே ஆழ்வார்களும் ஆசாரியர்களும் உப தேசித்தார்கள். ஸ எதம் தேவயா நம் பந்தா நமாபத்ய அக்னி லோகம்ஸ வருண லோகம்ஸ் ஆதித்த லோகம்ஸ இந்திர லோகம்ஸ பிரஜாபதி லோகம்ஸ பிரம்ம லோகம்" உயிர்களானது எவ்வாறு யோகங்களை கடந்து ஸ்ரீவைகுண்டத்தின் வாசலிலுள்ள விரஜா நதியில் தீர்த்தமாடி சூக்கும் உடலை கலைத்து ஸ்ரீ வைகுண்டம் அடைகின்றது என்பதை இவ்வுபநிடதம் கூறுகின்றது. (தொடரும்)

குரு,ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9.

பொருந்தா எண்கள்: 6,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், 

வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo