"மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02-08-2018)..!

2018-08-02 08:51:07

02.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம்17 ஆம் நாள் வியாழக்கிழமை.

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி காலை 8.47 வரை. பின்னர் சஷ்டி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் பகல் 11.15 வரை. அதன் மேல் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: உத்தரம், அஸ்தம். சுபநேரம்: பகல் 10.45– 11.45, ராகுகாலம் 1.30– 3.00. எமகண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) (நாளை ஆடி 18 ஆம் பெருக்கு. சகல நதிதீரங்களிலும் சுமங்கலிப் பெண்கள் தாலிச் சரடு மாற்றும் வைபவம்) கிருஷ்ண பட்ச சஷ்டி.

 மேடம் : தனம், சம்பத்து

இடபம் :காரியசித்தி, அனுகூலம்

மிதுனம் : திறமை, முன்னேற்றம்

கடகம் : ஆர்வம், திறமை

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : செலவு, விரயம்

விருச்சிகம் : நற்செயல், பாராட்டு

தனுசு : லாபம், லக்ஷ்மீகரம்

மகரம் : சுகம், ஆரோக்கியம்

கும்பம் : உழைப்பு, உயர்வு

மீனம் : சுபம், மங்களம்

"பிரம்ம பிந்தூப நிஷத்தில் விஷ்ணு நிர்ணயம்", "கவாம நேக வர்ணா நாம் ஸர்வ துக்ராஹ கத்வேந ததஸ் மயஹம் வாசுதேவஸ் இத்யுபநிஷத்" பொருள்– பல நிறங்களையுடைய பசுக்களின் பால் ஒரே நிறமாக வெள்ளை நிறமாக இருக்கின்றது. அந்த பாலில் நெய் போலவும் அரனிக் கட்டையில் நெருப்பைப் போலவும் பரமபுருஷனான விஷ்ணு உள்ளான். 

நாம் ஞானக்கண்ணைக் கொண்டு எழுப்பும் ஓசையில் அவய மற்றதும் ஆசையற்றதும் சலன மற்றதும் எல்லா பூதங்களுக்கும் இருப்பிடமாய் யாதுமொரு ரட்சிக்கும் தன்மையுடைய அந்தவாசு தேவன் குடி யுள்ளான். (இது உபநிஷத்)

சந்திரன், குரு ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 9, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right