"கோபத்திலும் பாவம் செய்யாதீர்கள்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29-07-2018)..!

Published on 2018-07-29 08:36:59

29.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி. நாள் முழு­வதும் அவிட்டம் நட்­சத்­திரம். நாள் முழு­வதும் திதி நட்­சத்­திர திரி தினஸ் பிருக்கு. சிரார்த்த திதி தேய்­பிறை, துவி­தியை, மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூசம், சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) இன்று சூரிய வழி­பாடு கண்­ணூறு கழித்தல் நன்று. 

மேடம் : நிறைவு, பூர்த்தி

இடபம் : அச்சம், பகை

மிதுனம் : ஓய்வு, அசதி

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : ஊக்கம், உயர்வு

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்

தனுசு : பக்தி, ஆசி

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : பேராசை, நஷ்டம்

மீனம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

ப்ரச்நோ பனிஷத் தில் விஷ்ணு நிர்­ணயம் “விஸ்­வ­ரூபம் ஹரிணம் ஜாத வேதஸம் பாரா­யணம் ஜோதி ரேகம் தபந்தம்” பொருள்: உல­கங்­களை உரு­வாகக் கொண்­டவன் ஸ்ரீமத் நாரா­யணன். வேதங்­களின் பிறப்­பிடம். பிராப்ய ப்ராபகன் ஆனவன். நிகரில் ஜோதி. எப்­பொ­ழுதும் பிர­கா­சிப்­பவன் (நாளை சைத்­தி­ரிய உப­நி­ஷத்தின் தெளிவு)

("விரும்­பு­வதை பெற முடி­யா­விட்டால் பெற முடிந்­ததை விரும்­பு­வோ­மாக” – ஸ்பெயின்)

சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் (பிறப்பு எண் 2, விதி எண் 2) கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்:1, 5, 6, 7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)