"மற்றவர்களுக்கு உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24-07-2018)..!

Published on 2018-07-24 08:33:40

24.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 8 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கிலபட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு 9.01 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. கேட்டை நட்­சத்­திரம் மாலை 6.32 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவா­தசி சித்­தா­மிர்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளி­கை­காலம் 12.00– 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) 

மேடம் : திறமை, முன்­னேற்றம்

இடபம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

மிதுனம் : நலம், ஆரோக்­கியம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : பரிவு, பாசம்

துலாம் : சோர்வு, அசதி

விருச்­சிகம் : கவலை, கஷ்டம்

தனுசு : இலாபம், லஷ்­மீ­கரம்

மகரம் : காரி­ய­சித்தி, அனு­கூலம் 

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : யோகம், அதிர்ஷ்டம்

கோட் புலியார், கலி­யனார் நாயன்­மார்கள் குரு­பூஜை தினம், சாதுர்­மாஸ விர­தா­ரம்பம். ஆடிச்­செவ்வாய் அம்­பிகை வழி­பாடு சிறப்பு. எத­னி­ட­மி­ருந்து உயிர்கள் தோன்­று­கின்­ற­னவோ, நிலை­பெற்று வாழ்­கின்­ற­னவோ, கடை­சியில் நீக்கம் பெற்று எதனில் ஒடுங்­கு­கின்­ற­னவோ அத­னையே பிரம்மம் என்று அறி­வா­யாக என்று உப­நி­டத மந்­தி­ரங்கள் கூறு­கின்­றன. அந்த பிரம்மம் “ஸ்ரீமன் நாரா­யணன்” மட்­டுமே என்று தீர்­மா­ன­மாகச் சொல்­லிற்று. சான்­று­களில் தலை­சி­றந்த உப­நி­ட­தங்கள் ஸ்ரீ வைஷ்­ணவம் ஓர் அறி­வியல் சமயம். தெளி­யாத மறை நிலங்­களைத் தெளி­வாகச் சொல்லும் ஒரு நெறி. அந்­நெ­றியில் அமைந்த ஆன்­மீகம் “ஸ்ரீ வைஷ்­ணவம்” .

(“பிரம்­மத்தை நேராக உய்த்­து­வரும் அனு­ப­வமே உபா­ஸனை” –ஸ்ரீ ராமா­னுஜர்) 

சுக்­கி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணம்: அடர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo