07.03.2016 மன்மத வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-03-07 11:28:42

ருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.00 மணிவரை. பின்னர் சதுர்த்தசிதிதி. அவிட்டம் நட்சத்திரம் பின்னிரவு 1.12 வரை அதன் மேல் சதயம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி. சித்தயோகம் மேல் நோக்கு

நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம் பூசம் சுபநேரங்கள் காலை 6.00 – 7.00, 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 7.30 – 9.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 – 3.00 வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் தயிர்) (சகல சிவாலயங்களிலும் ஸ்ரீமஹா சிவராத்திரி விரதம்)

மேடம் உற்சாகம், வரவேற்பு

இடபம் லாபம், லஷ்மீகரம்

மிதுனம் நட்பு, உதவி

கடகம் உயர்வு, மேன்மை

சிம்மம் வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி பாசம், அன்பு

துலாம் தெளிவு, அமைதி

விருச்சிகம் ஏமாற்றம், கவலை

தனுசு லாபம், லஷ்மீகரம்

மகரம் புகழ், பாராட்டு

கும்பம் அச்சம், பகை

மீனம் ஊக்கம், உயர்வு

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமலை” பாசுரம் 37 “தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துளோங்கு ஒளியுளார் தாமேயன்றே தந்தையும் தாயுமாவாள்? எளியது ஓர் அருளுமன்றே என்திறந்து எம்பிரானார் அனியன் நம்பையல் என்னார் அம்மவோ கொடியவாரே! பொருளுரை புது வெள்ளத்தால் கலங்கிய காவிரியால் சூழப்பட்ட ஸ்ரீரங்கத்திலே பிரகாசிக்கும் பெரிய பெருமாளே நமக்கு தாயும் தந்தையும் ஆவார். நான் அவனிடம் வேண்டுவது குளிர்ந்த கடாட்ச்சத்தை மட்டுமே எனக்கு நன்மை செய்யக் கூடிய எம்பிரான்மட்டுமே. நான் அவன் அருளுக்குரியவன்.

கேது சூரியன் கிரகங்களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 1–2–5

பொருந்தா எண்கள்: 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் பச்சை