"ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கௌரவிக்கப்படும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09-07-2018)..!

Published on 2018-07-09 08:27:58

09.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 25 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி மாலை 5.53 வரை. அதன்மேல் துவா­தசி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.44 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. ஏகா­தசி மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: சித்­திரை. சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 7.30 – 9.00, குளிகை காலம் 1.30– 3.00, எம­கண்டம் 10.30 – 12.00. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்). கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம், கார்த்­திகை விரதம்.

மேடம் : சிக்கல், சங்­கடம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : சிரமம், தடை

சிம்மம் : அமைதி, நிம்­மதி

கன்னி : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : வெற்றி, யோகம்

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : ஆக்கம், நிறைவு

மீனம் : அன்பு, பாசம்

செவ்­வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று அதிர்ஷ்ட எண் 9. மிகவும் அதிர்ஷ்­ட­மான எண். நவக்­கி­ர­கங்கள் 9, நவ­சக்­திகள் 9, நவ­துர்க்­காக்கள் 9, நவ­ராத்­தி­ரிகள் 9, நவ­ர­சங்கள் 9. சிறப்­பான 9 எண் கூட்­டுத்­தொ­கை­யாக அமைந்­த­வர்கள் எதிர்­காலம் மிகவும் சிறப்­பாக அமையும். உடல் உஷ்ணம் கொண்­ட­வர்கள் செயல்­களில் தேர்ச்சி பெற்­ற­வர்கள். மனோ­பலம் மிக்­க­வர்கள். உடல் உஷ்­ணத்தை தவிர்க்க ஸ்படிக மாலை அணிதல் அவ­சியம். இவர்­க­ளுக்கு அதிர்ஷ்ட எண்கள் 5, 6, 9. அதிர்ஷ்ட வர்­ணங்கள் சிவப்பு, நீலம். பொருந்தா வர்­ணங்கள் வெளி­ரான நிறங்கள். முருகன் எண் 9 க்கு ஆதிக்கம் உடை­யதால் முரு­கனை வழி­படல், கந்தசஷ்டி கவச பாராயணம் நன்று.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோவில்)