04.03.2016 மன்மத வருடம் மாசி மாதம் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-03-04 10:15:01

கிருஷ்ணபட்ச தசமி திதி பிற்பகல் 2.43 வரை. அதன்மேல் ஏகாதசி திதி பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 2.38 வரை. பின்னர் உத்தராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி சித்தயோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகினி, மிருக சீரிஷம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார சூலம் மேற்கு (பரிகாரம்– வெல்லம்). காரியர் நாயனார் குரு பூஜை.

மேடம் - பக்தி, ஆசி

இடபம் - பொறுமை, அமைதி

மிதுனம் -போட்டி, ஜெயம்

கடகம் - லாபம், லஷ்மீகரம்

சிம்மம் - வரவு, லாபம்

கன்னி -பேராசை, நஷ்டம்

துலாம் -கவனம், எச்சரிக்கை

விருச்சிகம் -உயர்வு, மேன்மை

தனுசு -இன்பம், மகிழ்ச்சி

மகரம் - உயர்வு, மேன்மை

கும்பம் -யோகம், அதிர்ஷ்டம்

மீனம் -உற்சாகம், வரவேற்பு

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமாலை” பாசுரம் 34 “உள்ளத்தே உறை யும் மாலை உள்ளுவாருள் நிற்தெல்லாம் உடனிருந்து அறிதி என்று வெற்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே! " பொருளுரை, மனதில் வாசம் செய்யும் திருமாலை உணர்ந்து அறியும் அறிவில்லாத கள்வனாகிய நான், உனது தொண்டனாய் உடலில் பன்னிரு திருமண் காப்பு நாமங்களை தரித்து சிந்திப்பவர்களின் சிந்தனைகளையெல்லாம் கூடவே இருந்து அறிகிறாய் என்று அறிந்து, நானி எனக்குள்ளே என் அறியாமையை எண்ணி விலா எலும்பு நொறுங்கும்படி சிரித்தேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(ஒரு மனிதன் அதிகமாக பேசினால் வாயாடி குறைவாக பேசினால் கூச்சமுள்ளவன்”)

ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் : 2, 1, 5, 6

பொருந்தா எண்கள் : 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான நீலம், பச்சை