02.03.2016 மன்மத வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-03-02 07:22:03

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி பிற்பகல் 2.07 வரை. அதன்மேல் நவமி திதி. கேட்டை நட்சத்திரம் பின்னிரவு 1.19 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. நவமி சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரனி, கார்த்திகை. சுபநேரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00. வார சூலம் – வடக்கு (பரிகாரம் பால்). 

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : தடை, இடைஞ்சல்

கடகம் : இன்சொல், பாராட்டு 

சிம்மம் : பணம், பரிசு

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : பொறுமை, நிதானம்

விருச்சிகம் : பேராசை, நஷ்டம்

தனுசு : செலவு, விரயம்

மகரம் : தனம், சம்பத்து

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : புகழ், பெருமை

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமலை பாசுரம் 32 “ஆர்த்து வண்டலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள் கார்த்திரளணைய மேனி கண்ணனே!" பொருளுரை: வண்டுகள் ரீங்கரித்து அலைந்து கொண்டிருக்கும் தோட்டங்கள் அழகு செய்யப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சயனித்திருக்கும் கார்மேகம் போன்ற திருமேனியை உடைய "துவாரகா" நிலைய கண்ணணே. உன்னை தரிசிக்கமாட்டாத மனிதர்களில் கள்வனும் மூர்க்கனுமான நான் வந்துள்ளேன். இது மூடத்தனமல்லவா? எனக்கு நீ காட்சியளிக்கமாட்டாயா? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“உலகத்தில் உள்ள எல்லா இன, மத மக்களையும் ஒரே இரத்த சம்பந்தமுடையவராகவே கடவுள் படைத்திருக்கின்றார். இயேசு கிறிஸ்து)

சந்திரன், புதன் கிரகங்களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 – 7

பொருந்தா எண்கள்:  9 – 8 – 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான நிறமுடைய பச்சை, மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)