"நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? - என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு......!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (31-05-2018)..! 

Published on 2018-05-31 08:38:03

31.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் வியாழக்கிழமை.

கிருஷ்ணபட்ச துவிதியை திதி முன்னிரவு 11.22 வரை. பின்னர் திரிதியை திதி. மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும் (நட்சத்திரதிரிதினஸ் பிருக்கு). சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை. சித்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: ரோகிணி. சுபநேரங்கள்: பகல் 10.30–11.30, ராகுகாலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00–7.30, குளிகை காலம் 9.00–10.30, வாரசூலம்–தெற்கு. (பரிகாரம் –தைலம்). கரிநாள் (சுபம் –விலக்குக)  

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : புகழ், சாதனை

மிதுனம் : ஆதாயம், லாபம்

கடகம் : சுகம், இன்பம்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

கன்னி : அன்பு, ஆதரவு

துலாம் : புகழ், பெருமை

விருச்சிகம் : அமைதி, தெளிவு 

தனுசு : நட்பு, உதவி

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : சுபம், மங்களம்

மீனம் : பக்தி, ஆசி

திருஞானசம்பந்தர், திருநீல நக்கர், திருநீலகண்ட பாணர், முருகனார் நாயன் மார்கள் குருபூஜை, இன்று வியாழக் கிழமை மூலம் நட்சத்திரம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமியை வழிபடுதல் நன்று. “அஞ்சிலே ஒன்று பெற்றான். அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியர்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயாலூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்”

(“கர்வம் பிடித்த புத்திசாலியை விட அன்பான முட்டாளே மேல்”)

 ராகு, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

 அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8, 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)