"குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் அவற்றை உணராமல் இருப்பது தான் ........!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30-05-2018)..! 

Published on 2018-05-30 08:18:14

30.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 16 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­ பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 9.41 வரை. பின்னர் துவி­தியை திதி. கேட்டை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.30 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. சித்­த­ யோகம். கரிநாள் (சுபம் விலக்­குக). சம­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 12.00–1.30, எம­கண்டம் 7.30–9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூ­லம்–­வ­டக்கு. (பரி­காரம் –பால்). ஜேஷ்ட பகுனப் பிர­தமை. நாளை திரு­ஞா­ன­சம்­பந்த நாயனார் குருபூஜை.

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : லாபம், லக் ஷ்­மீ­கரம் 

சிம்மம் : அன்பு, பாசம் 

கன்னி : முயற்சி, முன்­னேற்றம் 

துலாம் : நன்மை, முன்­னேற்றம்

விருச்­சிகம் : வரவு, லாபம் 

தனுசு : தடை, தாமதம் 

மகரம் : பக்தி, அனுக்­கி­ரகம் 

கும்பம் : அமைதி, தெளிவு 

மீனம் : சுபம், மங்­களம்

இன்று கேட்டை நட்­சத்­திரம். ஸ்ரீவ­ராஹப் பெரு­மாளை வழி­படல் நன்று. சகல காரி­யங்­க­ளிலும் சித்­தி­பெற உங்கள் காரி­யங்­களை தாமதம் செய்­யா­தீர்கள். “Do It Now” “உறங்­கு­வது போலும் சாக்­காடு. உறங்கி விழிப்­பதும் போல் பிறப்பு” திருக்­குறள் 339. உலகம் நிலை­யில்­லா­தது. என்ன நேரத்தில், எந்­நே­ரத்தில் என்ன நிகழும் என்­பதை யாரும் அறு­தி­யிட்டு கூற­மு­டி­யாது. மின்னல் மின்னும் ஒளிப்­பி­ளம்பாய் காட்­சி­ய­ளிக்கும் அதன் ஆயுள் ஒரு கணமே. அத்­த­கைய மின்னல் போன்­றதே நம் வாழ்வு. உட­னுக்­குடன் விரைந்து செயற்­ப­டுங்கள். “மின்னின் நிலையில் மன்­னுயிர் யாக்­கைகள் என்­னு­மி­டத்து, இறை உன்­னுமின் நீரே” பொருள் பொதிந்த அரு­ளுரை. வராஹப் பெரு­மாளை இன்று வழி­ப­டுங்கள். குரு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ் சிகப்பு.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)