"ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது, ஒரு மாதம் நூல்களைப் படிப்பதை விட அதிக நன்மை தரும்......!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25-05-2018)..! 

Published on 2018-05-25 09:05:21

25.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி முன்­னி­ரவு 7.56 வரை. அதன் மேல் துவா­தசி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.59 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. அமிர்த சித்­த­யோகம் .சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரட்­டாதி, உத்­த­ரட்­டாதி. சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 10.30–12.00, எம­கண்டம் 3.00–4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம் –வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள் ஆழ்வார் திரு­ந­கரி நம்­மாழ்வார் உற்­சவம்.

மேடம் : நிறைவு, பூர்த்தி

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : ஜெயம், புகழ்

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : சினம், பகை

விருச்­சிகம் : மறதி, விரயம்

தனுசு : ஆர்வம், திறமை

மகரம் : ஓய்வு, அசதி

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : புகழ், பாராட்டு

இன்று சுக்­கில பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு மோகினி ஏகா­தசி என்று பெயர். திருஷ்ட புத்­தியின் பாவங்­களை போக்­கி­யது இவ் ஏகா­தசி விரதம். இன்று உப­வா­ஸ­மி­ருந்து திரு­மாலை வழி­ப­டு­வதால்  நம் பாவங்கள் விலகும்.

ஸ்ரீ வெங்­க­டேச சுப்­ர­பாதம். "பத்­மேச மித்ர சத­பத்ர கதா­லி­வர்க்கர் திரு­வேங்­க­டவன் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி" கதி­ரவன் கண்­பட்டு மலர்ந்த தாம­ரையில் மதி­கெட்ட வண்­டி­னங்கள் குவளை மல­ரோடு எதி­ராடி உயர்­வென்று ரீங்­காரப் பாட்­டி­சைக்க மதி­மு­கனே வேங்­க­டவா திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய்.

(“எவ்­விதம் நீ இறந்தாய் என்­பது கேள்­வி­யல்ல. எவ்­விதம் நீ வாழ்ந்தாய் என்­பதே கேள்வி – ஜான்சன்)

கேது, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள். இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo