"சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல. கவலையை மற(றை)க்க கற்று கொண்டவர்கள்.": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-05-2018)..!:

Published on 2018-05-17 09:03:35

17.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 3 ஆம் நாள் வியாழக்கிழமை.

சுக்கில பட்ச துவிதியை திதி பகல் 2.06 வரை. பின்னர் திரிதியை திதி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.07 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். திதித் வயம். சிரார்த்த திதிகள். தேய்பிறை துவிதியை திரிதியை. மரண யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம். சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகைகாலம் 9.00 – 10.30, வாரசூலம் –தெற்கு (பரிகாரம் – தைலம்) 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : சோர்வு, அசதி

மிதுனம் : விவேகம், வெற்றி

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : தடை, தாமதம்

விருச்சிகம் : விரயம், செலவு

தனுசு :அனுகூலம், காரியசித்தி

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : மறதி, செலவு

மீனம் : அன்பு, ஆதரவு

“திரு­வேங்­க­ட­மு­டையான்  திருப்­பள்­ளி­யெ­ழுச்சி” அருள்­பெற அனைத்­து­லகும் ஆசி கூறும் அன்­னையே! அரக்­கர்­த­மை­ய­ழித்த திரு­மாலின் திரு­மார்பைப் பெறும் பேறாய்ப் பெற்­ற­வளே! வேங்­க­டவன் துணையே! அருள்­தந்து தாயே! திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய்! சுப்­ர­பாதம் “மாதஸ் ஸமஸ்த ஜகமாம் மது­கை­ட­பாரே வஷோ விகா­ரினி மனோ­கர திய்ய மூர்த்தே ! ஸ்ரீ ஸ்வாமிநி ச்ரித­ஜன பிரிய தாஞ்சீலே ஸ்ரீ வேங்­கட சத­யதே தவ­சுப்ர பாதம்”  தொடரும்…..

(“இறை­வனால் ஒரு பெண்­ணுக்கு கொடுக்­கப்­படும் முதல் சீதனம் அழ­காகும். இறை­வனால் பறிக்கப்படும் முதல் சீதனமும் அதுவே”)

சனி, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo