29.02.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 17 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

Published on 2016-02-29 07:50:04

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பகல் 11.35 வரை. அதன் மேல் ஸப்தமி திதி விசாகம் நட்சத்திரம் முன்னிரவு 10.03 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி மரண யோகம் கரிநாள் (சுபம் விலக்குக) கீழ் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரேவதி அஸ்வினி சுபநேரங்கள் காலை 6.30– 7.30, 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00 குளிகை காலம் 1.30– 3.00, எமகண்டம் 10.30– 12.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) 

மேடம்: கவலை, சோதனை

இடபம்: உழைப்பு, உயர்வு

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: நட்பு, உதவி

சிம்மம்: புகழ், பெருமை

கன்னி: வரவு, லாபம்

துலாம்: செலவு, விரயம்

விருச்சிகம்: அன்பு, இரக்கம்

தனுசு: நலம், ஆரோக்கியம்

மகரம்: நன்மை, யோகம்

கும்பம்: தடை, தாமதம்

மீனம்: புகழ், பாராட்டு

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமாலை” திவ்ய பிரபந்தம் பாசுரம் 30. “மனதில் ஒரு தூய்மையில்லை. வாயில் ஓர் இன் சொலில்லை. சினத்தினால் செற்றம் நோக்கித் தீ????????? வாளா புனத்துழாய் மாலையானே! பொன்னிசூழ் திருவரங்கா! பொருளுரை! துளிசிமாலை சூடியவரும் காவிரி சூழ் திருவரங்கத்தில் பள்ளி கொண்டவனே! என்னை யாளும் தலைவா என் உள்ளத்தில் காமக் குரோத எண்ணங்கள் நிறைந்திருப்பதால் தூய்மை இல்லை. கோபப் பார்வையில் பகைமை வெளிப்பட தீயைப் போல் கொடூரமான சொற்களை சொல்கின்றேன். வாயில் இன் சொல் வெளிப்படவில்லை. இப்படிப்பட்ட நான் உன்னை சரணடைந்துள்ளேன். இனி என் கதியென்ன? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“மனிதன் திட்டமிடுகின்றான். இறைவன் அதைத் தகுந்த மனிதர்கள் மூலமாக நிறைவேற்றி வைக்கிறான்)

சந்திரன் ராகு கிரகங்களில் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1– 7– 5– 6

பொருந்தா எண்கள்: 9– 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)