நல்ல மனி­தர்­க­ளுக்கு அச்­சங்கள் குறைவு.!

Published on 2018-03-23 09:45:09

23.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 09 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி பகல் 12.15 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. ரோகிணி நட்­சத்­திரம் மாலை 5.03 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி, மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள்: பகல் 12.30 – 1.30, மாலை 04.30– 05.30, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 09.00 வார­சூலம் –மேற்கு. (பரி­காரம் – வெல்லம்) சஷ்டி விரதம். நேசனார் நாயனார் குரு­பூஜை. ரோகிணி நட்­சத்­திரம். துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனை வழி­ப­டுதல் நன்று.  

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நன்மை, யோகம்

மிதுனம் : இலாபம்,லக் ஷ்­மீ­கரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : வரவு, இலாபம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : சுபம், மங்­களம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : அமைதி, தெளிவு

“ஆதிரேகை சாஸ்­திரம்” இரு­தய ரேகை அதன் அதி­காரம் “புரி­முடங் காட்-டும் அன்னார் புதன், சனி திரட்­டி­னோடு ரவி­திடல் கீழி­ருப்­பது இரு­தய ரேகை தானே” ஒரு­வ­ருக்கு புதன், சூரியன், சனி மேடு­க­ளுக்கு கீழே உள்ள பெரிய ரேகை இரு­தய ரேகை. இந்­த­ரேகை  வாழ்க்கை நாய், பாம்பு,¸விஷக்­கடி, பெண்நோய் மார­டைப்பு, பக்­க­வாதம், இதனால் ஏற்­படும் பாரி­ச­வாதம், முடம், தற்­கொலை, அங்­க­பேதம், இதய அறு­வை­சி­கிச்சை முத­லிய விளக்­கங்கள் அனைத்தும் காட்டும். நாளை புதன் ரேகை பற்­றிய விளக்­கங்கள் தொடரும். 

புதன் (5), சூரியன் (1) கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)