மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது

Published on 2018-03-22 09:54:59

22.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 8 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி பகல் 2.19 வரை. அதன் மேல் சஷ்டி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் மாலை 6.24 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். திதித்­வயம். சிரார்த்த திதிகள் சுக்­கில பட்ச பஞ்­சமி சஷ்டி திதி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சுவாதி, விசாகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, பிற்­பகல் 12.30– 1.30, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.00 வார­சூலம் –தெற்கு. கார்த்­திகை விரதம். கூர்ம கல்­பாதி ஸ்ரீ லஷ்மி பஞ்­சமி அனந்­தாதி நாக­பூஜை.

மேடம் : தடை, தாமதம்

இடபம் : ஆதாயம், லாபம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : உழைப்பு, உயர்வு

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : பேராசை, நஷ்டம்

துலாம் : பிர­யாணம், அசதி

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : களிப்பு, மகிழ்ச்சி

மகரம் : பிரிவு, அன்பு

கும்பம் : புகழ், சாதனை

மீனம் : அன்பு, இரக்கம்

இன்று பஞ்ச ரேகைப் படலம். ஆயுள் ரேகையும் அதன் அதி­கா­ரமும், “மிக்­கது ஆயுள் தீர்க்க தலை­விதி முடிவின் தீர்க்கம். ஊழ்­விதி தீர்க்கம் காட்டும் சுக்­கிர மேடு தந்த சூழிலை ஆயுள்­ரேகை. ஒருவர் குரு­மேட்டின் அடியில் தோன்றி கங்­கண ரேகை மேடு வரை சென்று சுக்­கி­ர­மேட்டை பிரித்து தோன்றும் பெரிய ரேகை ஆயுள் ரேகை. இவ் ரேகை அவ­ருக்கு அதிர்ஷ்டம், துர­திஷ்டம் நல்­வினை, தீவினை, விபத்து, அகால மரணம், நோய்­துன்பம், ஆயுள் கண்டம், தந்தை– தாய் மரணம் அனைத்­தையும் காட்­டக்­கூ­டிய ரேகை­யாகும். நாளை இரு­தய ரேகையும் அதன் விளக்­கங்­களும் தொடரும்.

ராகு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 4, 1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)