11.02.2016 மன்மத வருடம் தை மாதம் 28 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-02-11 08:18:24

சுக்கிலபட்ச திரிதியை திதி மாலை 3.37 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 2.33 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை திரிதியை சதுர்த்தி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். வளர்பிறை. சுபமுகூர்த்தம். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, மாலை 6.30 – 7.30, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தயிர்). 

மேடம்: களிப்பு, கொண்டாட்டம்

இடபம்: இன்பம், சுகம்

மிதுனம்: வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம்: சுகம், ஆரோக்கியம்

சிம்மம்: கவலை, கஷ்டம்

கன்னி: வரவு, இலாபம்

துலாம்: பகை, விரோதம்

விருச்சிகம்: சிக்கல், சங்கடம்

தனுசு: புகழ், பெருமை

மகரம்: உயர்வு, மேன்மை

கும்பம்: தடங்கல் ???? 

மீனம்: பணம், பரிசு 

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய ‘திருமாலை’ பாசுரம் 14 " வண்டினம் முரலும் சோலை. மயிலினம் ஆடும் சோலை. குயிலினம் கூவும் சோலை. அண்டர் கோன் அமரும் சோலை. அணி திருவரங்கம் என்ன? " பொருள் திருவரங்கத்தில் வண்டுகளின் கூட்டங்கள் சோலைகளில் ரீங்காரமிடுகின்றன. மயில் கூட்டங்கள் தோகை விரித்தாடுகின்றன. ஆகாயத்தில் மேகங்கள் கூடி நிற்கின்றன. குயில் கூட்டங்கள் இனிமையாக இசைக்கின்றன. தேவாதி தேவனான திருமால்பள்ளி கொண்டுள்ளான். இப்படிப்பட்ட அழகிய திருவரங்கத்தின் பெருமையை பாடாதவர்கள் மூர்க்கர்களே.  

(ஆழ்வார் திருவடிகளே சரணம்).

 

(“பயன் கருதாமல் ஒருவர் செய்கின்ற உதவி கடலைவிடப் பெரியது. ”)

சந்திரன், குரு ஆதிக்கம் கொண்ட நாள் இன்று. 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், இலேசான பச்சை 

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)