08.02.2016 மன்மத வருடம் தை மாதம்
Published on 2016-02-08 09:34:48
08.02.2016 மன்மத வருடம் தை மாதம்
08.02.2016 மன்மத வருடம் தை மாதம்
25 ஆம் நாள் திங்கட்கிழமை.
அமாவாஸ்யை திதி முன்னிரவு 9.22 வரை. அதன் மேல் சுக்கில பட்ச பிரதமை திதி. திருவோணம் நட்சத்திரம் மாலை 6.10 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். திருவோண விரதம். தை அமாவாஸ்யை அச்வத்த (அரச மர) பிரதட்சினம் பிதிர்தர்ப்பணம் சிரார்த்த திதி அமாவாஸ்யை அமிர்த சித்தயோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம் சுபநேரங்கள் காலை 7.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்)
மேடம் : நலம், ஆரோக்கியம்
இடபம் : பக்தி, அனுக்கிரகம்
மிதுனம் : வரவு, லாபம்
கடகம் : அமைதி, சாந்தம்
சிம்மம் : வெற்றி, ஜெயம்
கன்னி : ஜெயம், புகழ்
துலாம் : கவலை, சங்கடம்
விருச்சிகம் : சினம், பகை
தனுசு : நஷ்டம், கவலை
மகரம் : இன்பம், சுகம்
கும்பம் : உயர்வு, மேன்மை
மீனம் : முயற்சி, முன்னேற்றம்
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய ‘திருமாலை’ ஒரு வில்லால் ஓங்கு முந்நீரடைத்து உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார். பொருள்: ஆற்றுநீரும் ஊற்று நீரும் கடல் நீருடன் கலக்கும் ஓங்கிய அலைகளை உடைய சமுத்திரத்திலே கோதண்டத்தை வளைத்து நாண் தொடுக்க சமுத்திரராஜன் சரணடைந்தான். அதன் பின் அதில் அணை கட்டி, எல்லா உலகங்களும் உய்ய போரிலே அரக்கர் தலைவனான இராவணனைக் கொன்ற நம் காவலரான அழகிய மணவாளர் எழுந்தருளியுள்ள பெரிய மதில்களுடைய திருவரங்கம் என்று கருவிலும் பகவானின் திருவருள் இல்லாதவர்களே சொல்ல மாட்டார்கள். எம் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யாதவர்கள் காலத்தை வீணாக கழிப்பவர்களே! (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
(“இளமை அழகான முகத்தை பெற்றிருக்கிறது. முதுமை அழகான ஆன்மாவைப் பெற்றிருக்கிறது”)
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
பொருந்தா எண்கள்: 7, 8
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)