05.02.2016 மன்மத வருடம் தை மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-02-05 08:32:20

கிருஷ்ணபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.57 வரை. அதன் மேல் திரயோதசி திதி  மூலம் நட்சத்திரம் மாலை 6.37 மணிவரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை துவாதசி அமிர்த சித்த யோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி மிருகசீரிஷம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, பிற்பகல் 1.30 – 2.30 ராகு காலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 –4.30. குளிகை காலம் 7.30 –9.30. வார சூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்).

மேடம்: உயர்வு, மேன்மை

இடபம்: வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்:     சுபம், மங்களம்

கடகம்: செலவு, பற்றாக்குறை

சிம்மம்: மகிழ்ச்சி, பிரீதி

கன்னி: போட்டி, ஜெயம்

துலாம்: உயர்வு, மேன்மை

விருச்சிகம்: அன்பு, ஆதரவு

தனுசு: பகை, விரோதம்

மகரம்: நலம், ஆரோக்கியம்

கும்பம்: அன்பு, இரக்கம்

மீனம்: கவலை, கஷ்டம்

“திருமாலை” தொண்டரடிப் பொடியாழ்வார் அருளியது புலையற மாகி நின்ற புத்தொடு சமணமெல்லாம் சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான்” பொருள் நூல்களை நன்கு கற்று அதன் உட்பொருளை அறிந்த மாந்தர்கள் ஏனைய மதங்களை நெஞ்சாலும் ஆராய்வாரோ? அந்த உபதேசங்களை காதினாலும் கேட்பரோ? இப்படி சொல்வதற்காக என்தலையை வெட்டினாலும் நான் சாகமாட்டேன். இது சத்தியம் சான்றோர்களே. கோதண்டத்தினால் இலங்கையை வெற்றி கொண்ட ஸ்ரீ இராமனாய் அவதரித்த தேவாதி தேவனே! நீதான் உண்மையானவன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

("கூட்டத்தில் வைத்து ஒருவனை புகழ்ந்து பேசு ஆனால் புத்திமதி கூறாதே.")

புதன், கேது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 2,1 

பொருந்தா எண்கள் 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்) 

logo