இந்த லக்­கினகாரர்களுக்கு அதிஷ்டம் தான்.!

Published on 2017-07-09 09:54:03

ஒரு சாத­கத்­தி­லுள்ள பன்­னிரு ராசி­க­ளிலும் எது முதன்­மை­யா­னது எது இறு­தி­யா­னது என்­றெல்லாம் அறு­தி­யிட்டுக் கூற­மு­டி­யாது. எது நல்­லது எது நல்­ல­வென்று தரா­தரம் பார்க்­கவும் முடி­யாது. தமிழ்ப் புத்­தாண்டின் தொடக்­கமே சித்­திரை மாதப் பிறப்பு அன்று நவக்­கி­ர­கங்­க­ளிலும் முதன்­மை­யான சூரியன் மீனத்­தி­லி­ருந்து மேட­ரா­சிக்கு மாறு­கிறார். இதனை வைத்தே மேடத்தை முதன்­மை­யாகக் கொண்டு இராசி பலன் பார்க்கும் வழக்கம் ஏற்­பட்­டது. இரா­சி­யென்­பது வேறு. இலக்­கி­ன­மென்­பது வேறு. இலக்­கினம் உயி­ரென்றால் ராசி உட­லாகும். இலக்­கினம் அத்­தி­வா­ர­மென்றால் அதன் மீது எழுந்­துள்ள கட்­ட­டமே ராசி அதா­வது உயி­ரா­கிய இலக்­கினம் குடி­கொண்­டுள்ள உட­லா­கிய சந்­திரன் இருக்­கு­மிடம். மேடத்­திற்கு அதி­பதி செவ்வாய்.  இலக்­கினம் என்­பது ராசி­களில் முதலாம் வீடு. இங்கே சந்­திரன் அம­ரும்­போது இலக்­கி­னமும் ராசியும் ஒன்­றா­கி­றது.

மேட லக்­கி­னத்­திற்கு முக்­கி­யமா­னதே செவ்­வாயும் சந்­தி­ரனும் இணைந்­தி­ருப்­ப­துதான். இந்த இலக்­கி­னத்­திற்கு நாலாம் வீடான கடகம் சுகத்தைக் குறிக்கும் ஸ்தான­மாகும். இது சந்­தி­ரனின் சொந்த வீடு; ஆட்சி வீடு. அது பெற்ற தாயைக் குறிக்கும் வீடு­மாகும். அத்­துடன் வீடு, வாகனம், முத்து, பவளம், தங்கம் வெள்­ளி­யென்று நகை நட்­டு­க­ளுக்கும் கார­க­னாக கடகச் சந்­தி­ரனே விளங்­கு­கின்றான். பிருகத் சாதகம், ஜாதக அலங்­காரம் போன்ற சோதிடக் கிரந்­தங்கள் எல்லாம் சந்­தி­ரனும் செவ்­வாயும் இணைந்­தி­ருப்­பதை மாபெரும் ராஜ­யோ­க­மாக வர்­ணிக்­கின்­றன. பெண்­களின் சாத­கங்­களில் இதனை 'சந்­திர மங்­கள யோகம்' என்பர்.

இலக்­கி­ன­மெ­னப்­படும் முதலாம் வீடு மற்றும் 4 ஆம் 7 ஆம் 10 ஆம் வீடு­களில் இவ்­விரு கிர­கங்­களும் இணைந்­தி­ருந்தால் யோக­மாகும்.  வீரி­ய­மான செவ்­வா­யோடு சுகா­தி­ப­தி­யான சந்­திரன் சேரும்­போது வீரியம் காரி­ய­மாகும். ஆக்­க­பூர்­வ­மான காரி­யங்­களை ஆற்­று­வார்கள். இது வீரமும் விவே­கமும் சேர்ந்த அம்­ச­மாகும். எங்கு எழுச்சி கொள்ள வேண்டும்; எங்கு அடக்கி வாசிக்க வேண்டும் என்ற சூட்­சுமம் தெரிந்­த­வர்­க­ளாக இருப்­பார்கள். இந்த யோக­முள்­ள­வர்­க­ளுக்கு நாற்­பு­றமும் மரங்கள் அடர்ந்து குளிர்மை கோலோச்சும் ஆற்­றங்­க­ரை­யோர வீடு­களே வாசஸ்­த­லங்­க­ளாக வந்­த­மையும் எந்த மொழி­யாக இருப்­பினும் குறு­கிய கால அவ­கா­சத்தில் அந்த மொழியைக் கற்றுக் கொள்­வார்கள். எங்கு வாழ்ந்­தாலும் அந்தச் சூழ­லுக்­கேற்ற விதத்தில் தங்­களை மாற்­றியும் கொள்­வார்கள்.

மேட லக்­கி­னத்தில் செவ்­வாயும் சந்­தி­ரனும் சேர்ந்­தி­ருந்து பாவக் கிர­கங்­களின் பார்வை படா­ம­லி­ருந்தால் அத்­த­கை­யவர் பரம்­பரைப் புகழ்­பெற்ற ஒரு பாரம்­ப­ரி­ய­மான குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ரா­யி­ருப்பார். வீடு, தோட்டம், துரவு, வாக­ன­மென்று சௌக­ரி­யங்­க­ளோடும் இருப்பார்.  நான்கு வய­தி­லேயே பத்து வய­துக்­கு­ரிய முதிர்ச்சி அவ­ரிடம் தெரியும். எவ்­வ­ளவு கடி­ன­மான சூழல் ஏற்­பட்­டாலும் அதி­லெல்லாம் பாதிக்­கப்­ப­டாத சம­நி­லை­யான மன­தோடு விளங்­குவார். Real Estate  கட்­டட நிர்­மாணம் போன்ற துறை­களில் கொடி கட்டிப் பறப்பார். நக­ரங்­க­ளிலோ புற­ந­கர்­க­ளிலோ கட­லோர அல்­லது நதி­யோர இரம்­மி­மான சூழல்­களில் வாசஸ்­த­லங்­களை எழுப்பி விற்­பனை செய்யும் வர்த்­த­கர்­களின் சாத­கங்­களை ஆராய்ந்தால் இவ்­விதம் அமைப்பு இருக்­கக்­கா­ணலாம். இன்­னொரு புறம் புற்­றுநோய் மருத்­து­வத்­து­றை­யில்­பு­கழ்­பெற்று விளங்கும் மருத்­து­வர்­களின் சாத­கங்­க­ளிலும் இந்த அமைப்பு இருக்கும்.

மேட லக்­கி­னத்­திற்கு இரண்­டா­மி­ட­மான இட­ப­ரா­சியில் செவ்­வாயும் சந்­தி­ரனும் சேர்ந்­தி­ருந்­தாலும் நன்­மையே. ஏனெனில் மேடத்­திற்கு சுகா­தி­ப­தி­யான சந்­திரன் இங்கு உச்­ச­ம­டை­கிறார். செவ்­வாய்க்கும் இது நட்பு வீடாகும். இவ்­விதம் அமைந்­த­வ­ருக்கு பெற்­றதாய் மிகவும் அனு­ச­ர­ணை­யாக இருப்­ப­தோடு நெடுநாள் உயிர் வாழவும் செய்வாள். இத்­த­கை­யவர் பரீட்சை எழுதப் போனால் புத்­த­கத்தில் படித்­ததை அப்­ப­டியே கொண்டு போய் ஒப்­பு­விக்­க­மாட்டார். படித்­த­தோடு அது தொடர்­பாக நடை­மு­றையில் தாம் ஆராய்ந்து கண்­ட­வற்­றையும் தொடர்­பு­ப­டுத்தி எழுதும் நுண்­ண­றிவு கொண்­ட­வ­ரா­யு­மி­ருப்பார். அவ­ரவர் கைக்­கொண்ட துறை­களில் இத்­த­கையோர் மற்­ற­வர்­களை விட பிர­கா­சிப்­ப­தற்கு இது­வு­மொரு கார­ண­மா­யி­ருக்கும். இவ­ரிடம் பணப் புழக்கம் அதி­க­மி­ருப்­பதால் கணக்கு வழக்­கில்­லாமல் செல­வ­ழிப்­ப­வர்­க­ளா­கவும் கொடுத்து ஏமா­று­கி­ற­வர்­க­ளா­யுமி­ருப்பர். அனா­வ­சி­ய­மாக மற்­றவர் விட­யத்தில் தலை­யிட்டுக் கொண்­டே­யி­ருப்பார். மற்­ற­வர்­களால் இவரைப் புரிந்து கொள்ள முடி­யாது. தன்னை ஒரு புரி­யாத புதி­ராக வெளிப்­ப­டுத்திக் கொள்­வ­தைத்தான் இவரும் விரும்­புவார். சண்­டைக்­கா­ர­ரா­கவும் சமா­தான விரும்­பி­யா­கவும் மாறி மாறி இயங்­குவார். திற­மை­யான கண் மருத்­து­வர்­களின் சாத­கங்­களில் இந்த அமைப்பு இருக்கும். தந்­தையின் தொழி­லையே தன­யனும் செய்து முன்­னே­றுவார். அவ­தி­யான நகர வாழ்க்­கைக்குள் சீவித்­தாலும் அமை­திக்­காகச் சென்று ஓய்­வெ­டுக்க கிராமப் புறங்­களில் வீடுகள், தோட்­டங்கள் இவ­ருக்­குண்டு.

மிது­ன­மா­கிய மூன்­றா­மி­டத்தில் செவ்வாய், சந்­திரன் கூடி­யி­ருந்தால் படித்த படிப்­பொன்று பார்க்கும் வேலை­யொன்று என்­றி­ருக்கும். சட்­டத்­தா­ர­ணிக்­கென்று படித்­து­விட்டு பள்­ளியில் சென்று ஆசி­ரி­ய­ராகப் பணி செய்வார். இவ­ரது குடும்பம் பக்­திப்­ப­ரம்­ப­ரை­யானால் இவர் அதற்கு நேர்­மா­றாக நாத்­த­ழும்­பேற நாத்­திகம் பேசித்­தி­ரிவார்.  மிது­னத்­தி­லுள்ள புனர்­பூச நட்­சத்­தி­ரத்தில் சந்­திரன் அமர்ந்­தி­ருந்தால் கவிஞர் நாவ­லா­சி­ரியர் எனப் பேரெ­டுப்பார். உடன் பிறப்­பு­க­ளோடு சதா சண்­டையும் சச்­ச­ர­வு­மாக இருப்பார். காம உணர்ச்சி மிகுந்­தி­ருக்கும். தவ­றான நட்­புகள், தொடர்­பு­களால் தமது கௌர­வத்தை இழப்பார். ஆனாலும் இரவு முழு­வதும் நண்­பர்­க­ளுடன் கூடிக் களித்­து­விட்டு காலையில் சென்று பரீட்சை எழுதி சித்தி பெறும் மாணவர் இவர் மட்­டுந்தான். தாயார் எப்­போதும் நோயா­ளி­யா­யி­ருக்­கவும் பல­னுண்டு.

கட­க­ராசி சந்­தி­ரனின் ஆட்சி வீடு. ஆனால் செவ்வாய் இங்கே நீச­மா­கிறார். நீச­மென்றால் தனது சுயம், வலிமை யாவையும் இழத்தல். ஆகவே இவ்­வித கிரக அமைப்பைக் கொண்­ட­வ­ருக்கு எதிலும் சுய­மாக முடி­வெ­டுக்கும் குண­மி­ராது. எதி­லுமே ஓர் அவ­சரம், பட­ப­டப்பு இருக்கும். அமை­தி­யாக இருந்து யாரி­ட­மா­வது கேட்டு முடி­வெ­டுப்­பது இவ­ருக்கு நல்­லது. சந்­திரன் இங்கு வலி­மை­யாக இருப்­பதால் இவர் தன் தாயின் சாடை­யி­லேயே விளங்­குவார். சந்­தி­ர­னுடன் கூடி கேந்­திரம் பெறு­வதால் செவ்­வாய்க்கு நீச­பங்­கமும் இருக்­கி­றது. அதனால் இரு­வரும் இணைந்து அர­சியல் செல்­வாக்கு தொலை­நோக்கு சிந்­த­னைகள் என்­றெல்லாம் உயர்த்திக் கொண்­டே­யி­ருப்­பார்கள். தலைமைப் பண்­புகள் நிறைந்­தி­ருக்கும். நாட்­டியம், நாடகம், சமை­யற்­கலை, ஆடை­வ­டி­வ­மைப்பு போன்­ற­வற்றில் ஈடு­பட்டும் புகழ்­பெ­றுவர். கடற்­றொழில் கப்பல் போக்­கு­வ­ரத்துத் துறை­க­ளிலும் பணி­யாற்றி வளம்­பெ­றுவர்.

சிம்மம் சூரி­யனின் ராசி. இதில் சந்­தி­ரனும் செவ்­வாயும் சேர்ந்து மகம் நட்­சத்­தி­ரத்தில் அமர்ந்­தி­ருந்தால் பெரும் யோக­முள்­ள­தாகும். (உதா­ரணம் மறைந்த செல்வி ஜெய­ல­லிதா) வசதி வாய்ப்­புகள் எல்லாம் கூடு­த­லா­கவே கிடைக்கும். அத்தை, புத்தி, வித்தை, தாய்­மாமன், குல தெய்வம் போன்­ற­வை­களைக் கூறு­மி­ட­மாக இது இருக்­கி­றது. என­வேதான் தாய்­வழிக் குல­தெய்­வத்தை இவர்­களும் வழி­ப­டு­கி­றார்கள். எப்­போதும் தாய்­வழிச் சொந்­தங்­க­ளுக்கே முக்­கி­யத்­து­வமும் அளிப்பர். குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டையும். எப்­போதும் பெண் குழந்­தை­களே இவர்­க­ளுக்கு அதிர்ஷ்­ட­மா­ன­வை­க­ளாக இருக்கும்.  சொந்த ஊரை­விட்டு தென் மேற்கு அல்­லது வட­மேற்கு திசை­நோக்கி இடம்­பெ­யர்ந்­தால்தான் பெரி­தாக எத­னையும் சாதிப்­பார்கள். மிகுந்த பிடி­வாத குண­முள்­ள­வர்கள். இவர்­க­ளது கன­வு­களில் எதிர்­காலம் குறித்த விட­யங்கள் தெளி­வாகத் தெரியும்.

அடுத்து கன்­னி­ரா­சியில் நாலாம் வீட்­டுக்­கு­ரிய சந்­தி­ரனும் இலக்­கி­னா­தி­ப­தி­யான செவ்­வாயும் கூடி­யுள்­ளனர். இரு கிர­கங்­க­ளுக்­குமே இது­வொரு மறைவுத் தானம். இத்­த­கை­யவர் ஒரு பர­ப­ரப்­பான பேர்­வழி. ஆனாலும் எதிலும் நீடித்த புத்­தி­யு­டனோ கொள்­கை­யு­டனோ செயற்­ப­ட­மாட்டார். அடிக்­கடி தமது முடி­வு­களை மாற்றிக் கொண்­டே­யி­ருப்பார். எவ்­வ­ளவு சம்­பா­தித்­தாலும் கையிலே காசு தங்­காது. வெளி­நாட்டு வாழ்க்கை தான் இவர்­க­ளுக்கு விதி .பெரும்­பாலும் கப்பல் துறை­க­ளில பணி­யாற்றி நாட்­டுக்கு நாடு அலைந்து கொண்­டி­ருப்பர். சிறு வயது முதலே பெற்­ற­தாயைப் பிரிந்த வாழ்க்­கை­யி­ருக்கும் தாய்க்­குள்ள நோயெல்லாம் இவ­ருக்­கு­மி­ருக்கும். சில­ருக்கு திக்கு வாயும், சில­ருக்கு வாய் நிறைய தெற்றுப் பற்­க­ளு­மி­ருக்கும்.

செவ்­வாயும் சந்­தி­ரனும் களத்­திர வீடான துலாமில் ஒன்று கூடி மேட லக்­கி­னத்தை நேர்ப்­பார்வை பார்ப்­பது அரு­மை­யான விடயம். இவ்­விதம் அமைந்தோர் ஆண்­க­ளாயின் கவர்ச்­சி­க­ர­மான தோற்­ற­மி­ருக்கும். பெண்­ணாயின் பெண்­ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேர­ழ­கெல்லாம் படைத்­தி­ருப்பாள். மற்­ற­வர்­க­ளுக்கு சாத­னைக்­கு­ரிய விட­யங்கள் இவர்­க­ளுக்கு சாதா­ர­ண­மான விட­யங்­க­ளா­யி­ருக்கும். தாரம் அமை­வ­தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்­ப­து­போல இவர்­க­ளுக்கு நல்ல மனை­வியோ கண­வனோ  வாய்ப்­பது பிறவிப் பய­னா­யி­ருக்கும். தாய் வழி, அல்­லது தாய்­மாமன் வழி உற­வி­லேதான் திரு­மணம் நடக்கும். மனைவி வழிச் சீத­னமும் ஏரா­ளமாய்க் கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்­க­மில்­லாமல் நெடுநாள் பிர­கா­சிப்­பதும் இவர்­கள்தான். 

அட்­ட­மத்து வீடான விருச்­சி­கத்தில் செவ்­வாயும் சந்­தி­ரனும் கூடி­யி­ருப்­பது எவ்­வ­கை­யிலும் நல்ல அமைப்­பாகத் தெரி­ய­வில்லை. செவ்­வாய்க்கு இது ஆட்சி வீடா­யினும் சந்­திரன் இங்கு நீச­ம­டை­கிறார். சிறு வய­தி­லேயே தாயை இழத்தல், தந்தை மறு­மணம் புரிதல், மாற்­றாந்தாய்க் கொடுமை என்­றெல்லாம் இச் சேர்க்­கையின் பலன்கள் சொல்­லப்­ப­டு­கின்­றன. திற­மை­யி­ருக்கும்; அதனை வெளிப்­ப­டுத்த முடி­யாத தாழ்வு மனப்­பான்­மை­யு­மி­ருக்கும்.  வீண்­பழிச் சொல்­லுக்கு ஆளா­தல், ஏதோ­வொரு செய­லுக்­காக சமூ­கத்தால் தவ­றாகப் பார்க்­கப்­ப­டுதல் என்­றெல்லாம் நேரிடும். மூத்த சகோ­த­ரியின் தவ­றான அல்­லது இழுக்­கான திரு­ம­ணத்தால் இவரும் பாதிக்­கப்­பட்­டி­ருப்பார். இதனால் இவ­ரது திரு­ம­ணமும் நடை­பெ­றாது தடைப்­படும். இப்­ப­டி­யான சூழல்­களால் மது­வென்றும் போதை­யென்றும் தவ­றான பழக்­கங்­க­ளுக்கு உட்­ப­டுவார். இவர்­களில் ஆண்­க­ளுக்கு மூல வியாதி பரம்­பரை நோயா­க­வி­ருக்கும். பெண்­க­ளுக்கு கர்ப்பக் கோளா­றுகள் உடன் பிறந்த வியா­தி­க­ளா­யி­ருக்கும். பூமிக்­க­டியில் ஓடும் நீரோட்­டத்தைக் கண்­டு­பி­டித்து கிண­றுகள் அமைத்தல், புதையல் தோண்­டுதல் போன்ற நுட்­ப­மான பணி­களில் இவர்கள் வல்­ல­வர்­க­ளா­யி­ருப்பர்.   விருச்­சி­கத்தில் செவ்வாய் ஆட்சி பெறு­வதால் சொந்த வாழ்க்­கையில் எப்­ப­டித்தான் கூனிக் குறு­கி­யி­ருந்­தாலும் பொது வாழ்க்­கையில் இறங்­கி­விட்டால் பெரிய ஆட்­க­ளாக ஆளு­மை­யோடு திகழ்­வார்கள்.

தனு­சு­ரா­சியில் மேட லக்­கி­னா­தி­பதி செவ்வாய் இருப்­பது நல்­லதே. இது தந்­தையை விட அதி­க­மாக சம்­பா­தித்து உயர வைக்கும். தாய் ஸ்தானத்­திற்­கு­ரிய சந்­தி­ர­னுக்கு தனுசு ஆறாம் வீடாகி அங்கு மறை­வதால் பெற்ற தாய் மீது வெறுப்புக் காட்ட வைக்கும். தாய் நாட்டைத் தாண்டி வெற்றி பெற வைக்கும் கிரக அமைப்பு இது­வாகும்.

உப்பு மற்றும் மருந்து வியா­பாரம் (Pharmacy) செய்து முன்­னே­றலாம். ஆயு­தங்­க­ளுடன் புழங்­கு­வது ஆபத்­தாக முடியும்.

பத்­தா­மி­ட­மான மகர ராசியில் செவ்வாய் உச்­ச­ம­டை­கிறார். கூடி­யி­ருக்கும் சந்­திரன் தன் வீட்டை (கடகம்) நேர்ப்­பார்­வையாய் பார்க்­கிறார். அதிலும் மக­ரத்தில் வரும் திரு­வோண நட்­சத்­தி­ரத்­தி­லேயே சந்­திரன் சஞ்­ச­ரித்தால் மிக்க விசே­ட­மாகும். இதனால் முதல் தர­மான இரா­ஜ­யோக முண்­டாகும். (சூப்பர் ஸ்டார் ரஜி­னி­காந்தின் சாத­கத்­திலும் இதே அமைப்­புத்தான்) நான்­கைந்து தொழில்­களைச் செய்து கொண்­டி­ருப்பர். நவீன வச­தி­க­ளுடன் கூடிய வீடு அமையும். ஒரு வார்த்தை சொன்னால் நூறு வார்த்­தைக்குச் சம­மான பேச்சு. நுணுக்­க­மான புத்தி, நவீ­னத்­துவம், முன்­மா­திரி என்­றெல்லாம் கலக்­குவர். எடுப்­பான தோற்றம், எதிர்த்­த­வர்­களை மடக்கும் தந்­திரம் என்று சவால்­களை எளி­தாகச் சமா­ளிப்­பார்கள்.

கும்­ப­மா­கிய 11 ஆம் வீடு சர­லக்­கி­ன­மா­கிய மேடத்திற்கு பாதக ஸ்தானமாகும். 

இங்கே இலக்கினாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பாகச் சொல்லப்படவில்லை. இத்தகையவரிடம் கஞ்சத்தனம் மிகுந்திருக்குமாமென சோதிட நூல்கள் கூறுகின்றன. 

எவ்வளவு சொத்துச் சேர்த்தாலும் திருப்தியே இருக்காதாம். ஆனாலும் பெற்ற பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் ரகமாம் இது. அழகுப் பொருட்கள் தயாரித்தல், நவீன சிகையலங்காரம், ஆயுர்வேத சிகிச்சை (ஸ்பா) குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் தயாரித்தல் முதலான தொழில்களில் ஆர்வம் கொண்டு சம்பாதிப்பார். 

கழுத்துப் பிடிப்பு நிரந்தரமான வியாதி. பெற்ற தாயோடு பெரும்பகை பாராட்டுவார். முன்கோபம் அதிகம். அடுத்தவர் முன்னேற மூளையாயிருந்து செயற்படுவார். 

சுகாதிபதியான சந்திரன் 12 ஆம் வீடான மீனத்தில் (விரயஸ்தானம்) செவ்வாயோடு கூடியிருந்தால் அத்தகையவர் புகழ்ச்சிக்கு எளிதில் மயங்குபவராக இருப்பார். இந்த விடயத்தில் இவருக்கு நிதானம் வரவில்லையெனில் குறிக்கோளற்ற வாழ்க்கையே அமையக்கூடும். தாமாகவே முன்வந்து எவரையும் கைதூக்கிவிடமாட்டார். எதிர்பாராத திருப்புமுனைகள் வாழ்வில் வந்து கொண்டேயிருக்கும். விவாகரத்து ஆனவர்களை மறுமணம் செய்வது அவைகளிலொன்று. சோதிடத்தில் ஆர்வமதிகம். இக்கிரக அமைப்புக் கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் நல்லயோகத்தோடு வாழ்வார்கள்.