03.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை 

Published on 2017-07-03 09:37:48

சுக்கிலப் பட்ச தசமி திதி பின்னிரவு 1.26 வரை. அதன் மேல் ஏகாததி திதி. சுவாதி நட்சத்திரம் பின்னிரவு 5.49 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. அமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ரேவதி சுபநேரங்கள் காலை 6.15– 7.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகைக் காலம் 1.30– 3.00 வாரசூலம்– கிழக்கு (பரிகாரம் – தயிர்) விவாஹ சுபமுகூர்த்த நாள், வைவஸ்தவ மன்வாதி.அவ­மாகம்.  

மேடம்      – வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம்      – நன்மை, அதிர்ஷ்டம் 

மிதுனம்      – வரவு, லாபம்

கடகம்      – அன்பு, இரக்கம்

சிம்மம்          – தனம், சம்பத்து

கன்னி      – மேன்மை, உயர்வு 

துலாம்      – கவனம், எச்சரிக்கை

விருச்சிகம்    – கீர்த்தி, செல்வாக்கு

தனுசு      – பகை, பயம்

மகரம்      – பாசம், பிரிவு

கும்பம்      – சுகம், ஆரோக்கியம்

மீனம்      – சுபம், மங்களம்

இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம். அவதரித்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர், மாதம் ஆனி, நட்சத்திரம் சுவாதி. அம்சம் கரு டாம்சம், அருளிய பிரபந்தம் பெரியாழ் வார் திருமொழி. பல்லாண்டு பாடிய நம் பட்டார்பிரான் ஸ்ரீ ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. திருமகள் கேள்வனான திருவரங்க  நாதனையேதன் மாப்பிள்ளையாகக் கொண்டதால் பெரிய பெருமானின் மாம னராக திகழ்ந்தமையால் பெரிய ஆழ்வார் எனப் பெயர் பெற்றார். மறு பெயர் விஷ்ணு சித்தர். வல்லப பாண்டியன் சபையில் விஷ்ணுவே பரத்தவம் என்று நிர்ணயம் செய்து பொற்கிழி அருத்தவர். குரு, சந்திர கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று. 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்: 6, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளம் சிவப்பு, வெளிர் மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)