17.11.2015 மன்­மத வருடம் கார்த்­திகை மாதம் 1 ஆம் நாள் (விருச்­சிக மாதம்) செவ்­வாய்க்­கி­ழமை

Published on 2015-11-19 11:44:07

17.11.2015 மன்­மத வருடம் கார்த்­திகை மாதம் 1 ஆம் நாள் (விருச்­சிக மாதம்) செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கில பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 11.28 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி உத்­த­ராடம் நட்­சத்­திரம் மாலை 6.48 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. சூன்யம். சித்­தி­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிருக சீரிஷம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30. வார சூலம் – வடக்கு. (பரி­காரம் – பால்).

மேடம் : லாபம், லஷ்­மீ­கரம்
இடபம் : இன்பம், மகிழ்ச்சி
மிதுனம் : அன்பு, இரக்கம்
கடகம் : அமைதி, நிம்­மதி
சிம்மம் : பக்தி, ஆசி
கன்னி : ஆதாயம், லாபம்
துலாம் : தனம், சம்­பத்து
விருச்­சிகம் : விவேகம், வெற்றி
தனுசு : சுகம், ஆரோக்­கியம்
மகரம் : அன்பு, ஆத­ரவு
கும்பம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்
மீனம் : செலவு, பற்­றாக்­குறை

இன்று விருச்­சிக சூரியன். கார்த்­திகை மாதப்பிறப்பு. முடவன் முழுக்கு விஷ்ணு பதி புண்­ய­காலம். கரிநாள் சுபம் விலக்­குக. சுக்­கி­ல­பட்ஷ சஷ்டி. சகல சுப்­பி­ர­ம­ணிய ஸ்தலங்­க­ளிலும் கந்­த­சஷ்டி விரதம் சூர சம்­ஹார லீலை.
("சந்­திரன் இரவைப் பிர­கா­சிக்கச் செய்­கின்றான். சூரியன் உச்சிக் காலத்தைப் பிர­வே­சிக்கச் செய்­கின்றான். தருமம் மூன்று உல­கத்­தையும் பிர­கா­சிக்கச் செய்­கின்­றது. நல்ல மகன் தன் குலத்தைப் பிர­கா­சிக்கச் செய்­கின்றான்.")
சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
பொருந்தா எண்கள்: 8, 2, 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சல், நீலம்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)