18.01.2016 மன்மத வருடம் தைமாதம் 04ம் நாள் திங்கட்கிழமை.

Published on 2016-01-18 09:05:03

சுபயோகம்

18.01.2016 மன்மத வருடம் தைமாதம் 04ம் நாள் திங்கட்கிழமை.

கிருஷ்ணபட்ச நவமி திதி மாலை 3.22 வரை. பின்னர் தசமிதிதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 1.32 வரை பின்னர் கார்த்திகை நட்சத்திரம். திதித்வயம் சிராத்த திதிகள் நவமி, தசமி. சித்தியோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்தம் சித்திரை. சுபநேரங்கள் காலை6.30 –7.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 7.30 – 9.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 –3.00 வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : மகிழ்ச்சி, காரியசித்தி

இடபம் : லாபம், லஷ்மீகரம்

மிதுனம் : யோகம், அதிர்ஷ்டம்

கடகம் : இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : ஜெயம், வெற்றி

கன்னி : புகழ், பெருமை

துலாம் : நன்மை, யோகம்

விருச்சிகம் : செலவு, பற்றாக்குறை

தனுசு : விரோதம், பகை

மகரம் : கீர்த்தி, செல்வாக்கு

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : அன்பு, பாசம்

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி கதிரவன் குணதிசை சிகரம் வந்தளைந்தாள் அரங்கத்மா. பள்ளி எழுந்தருளாயே! உரை – திருவரங்கத்தில் சயனித்திருக்கும் பெருமாளே சூரியன் கிழக்கு திசையின் உச்சிக்கு வந்துவிட்டான். அடர்த்தியான இருள் விலகிவிட்டது. காலை நேரத்து பூக்கள் இதழ் விரிகின்றன. அவற்றில் தேன் சிந்துகின்றன. தேவர்கள் அரசர்கள் தங்களைத் தரிசிக்க நெருக்குகின்றனர். அவர்கள் ஏறிவந்த ஆண் யானைகளும் பெண்யானைகளும் பிளிறுகின்றன. முரசுகள் முழங்குவதால் சமுத்திரம் ஆர்ப்பரிப்பது போலுள்ளது. பரந்தாமா அனைவரையும் காக்க திருவிழிகள் மலர எழுந்தருள வேண்டும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

“பணம் சிறிதளவு உள்ளவன் ஏழையல்ல ஆசை அதிகம் உள்ளவனே ஏழை”

செவ்வாய், சூரியன் ஆதிக்கம் உள்ள இன்று

அதிர்ஷ்ட எண்கள்:  5

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள் – சிவப்பு, நீலம்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)