14.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 29ம் நாள் வியாழக்கிழமை

2016-01-14 07:47:15

சுக்கிலபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 12.28 வரை. அதன் மேல் சஷ்டி திதி. சதயம் நட்சத்திரம் காலை 7.52 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம் காலை 6.24 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை பஞ்சமி மரண யோகம் காலை 7.52 வரை. அதன் மேல் சித்த யோகம். நட்சத்திர அவமாகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மகம் சுபநேரங்கள் பகல் 10.30 –11.30 பிற்பகல் 12.30 – 1.30 ராகுகாலம் 1.30 – 3.00 எமகண்டம் 6.00 – 7.30 குளிகை காலம் 9.00 –10.30 வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்)

மேடம் : லாபம், லஷ்மீகரம்

இடபம் : நலம், ஆரோக்கியம்

மிதுனம் : சுகம், நன்மை

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : அசதி, வருத்தம்

விருச்சிகம் :     புகழ், பாராட்டு

தனுசு : பொறுமை, நிதானம்

மகரம் : நற்செயல், பாராட்டு

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : அன்பு, பாசம்

தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் மார்கழி உற்சவ திருப்பாவை நோன்பு முடிவு. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம். திருப்பாற்கடல் கடைந்த திருமகள் ????????? என்ற அசுரனை அழித்த கேசவனை முப்பது பாசுரங்களால் வழிபட்டவர்களுக்கு சிவந்த கண்களும் அழகிய வதனத்தையும் கொண்ட திருமகளை மார்பில் தரித்த திருமாலால் எல்லா இடங்களிலும் திருவருள் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகின்றோம். திருப்பாவை நோன்பு முற்றிற்று (ஆண்டாள் திருவடிகளே சரணம்) நாளை உழவர் திருநாள். வேகமும் விவேகமும் தூய்மையும் உழைப்பும் சொத்தாய் கொண்ட நம்வாழ்வில் பொங்கட்டும் மகிழ்ச்சியுடன் கூடிய புதுப் பொங்கல் நாளை மகர சங்கிராந்தி பொங்கல் பண்டிகை – பொங்கல் வைக்க சுபநேரங்கள் காலை 6.00 – 9.00

புதன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  பச்சை, நீலம், கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right