13.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 28ம் நாள் புதன்கிழமை

Published on 2016-01-13 08:36:30

சுக்கிலபட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 2.35 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 9.09 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி மரண யோகம் காலை 9.09 வரை அதன் மேல் சித்த யோகம். சதுர்த்தி விரதம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டமம் ஆயில்யம். சுபநேரங்கள் காலை 9.30 –10.30 பகல் 10.30 – 11.30. மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 12.00 – 1.30 எமகண்டம் 9.30 – 12.00 குளிகைகாலம் 10.30 –12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

மேடம் : இடையூறு, தொந்தரவு

இடபம் : துன்பம், கவலை

மிதுனம் : நட்பு, உதவி

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : அசதி, வருத்தம்

கன்னி : ஓய்வு, சுகம்

துலாம் : பயம், பகை

விருச்சிகம் :     அமைதி, நிம்மதி

தனுசு : பொறுமை, நிதானம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : நஷ்டம், கவலை

நாளை போகிப்பண்டிகை. தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் மார்கழி திருப்பாவை நோன்பு 28ம் நாள் “??????????? பின் சென்று ‘கானம்’ சென்று உண்போம் இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்” உரை – நாங்கள் பசுக்களின் பின்னால் காட்டுக்குச் சென்று சாப்பிடுகின்றோம். நீ ஒருகாலத்தில் மாடுகளின் பின்னால் போனதை எண்ணியே இவ்வாறு செல்கின்றோம். நாங்கள் சிறப்பான புத்தியில்லாதவர்கள். ஆயர் குலத்தில் எங்களோடு நீயும் பிறந்தது நாங்கள் செய்த புண்ணியமாகும். குறையே இல்லாத கோவிந்தா! உன்னோடு எங்களுக்கு உள்ள உறவு அழிக்கமுடியாதது. நாங்கள் அறியாமை உள்ளவர்கள் உன்னிடம் கொண்ட அன்பின் உரிமையால் உன் பெயரைச் சொல்லி அழைப்பதற்கு கோவிக்காதே! இறைவனே எங்கள் நோன்பிற்கு உரியவற்றை அருள் கொண்டு திருவாயாக – (ஆண்டாள் திருவடிகளே சரணம்)

ராகு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  வெளிர் நீலம் – மஞ்சள்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)