09.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 24ம் நாள் சனிக்கிழமை

Published on 2016-01-09 08:07:08

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி காலை 8.32 வரை. அதன்மேல் அமாவாஸ்யை திதி. மூலம் நட்சத்திரம் பகல் 10.55 வரை பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. அமாவாஸ்யை சித்தயோகம் ஸர்வ அமாவாஸ்யை ஹனுமத் ஜெயந்தி. சாக்கியர் நாயனார் குருபூஜை. கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகினி மிருகசீரிடம். சுபநேரங்கள் காலை 7.45 – 8.45. பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 9.00 – 10.30 எமகண்டம் 1.30 – 3.00. குளிகைகாலம் 6.00 – 7.30 வாரசூலம்–கிழக்கு (பரிகாரம் – தயிர்) 

மேடம் : நற்செயல், பாராட்டு

இடபம் : நலம், ஆரோக்கியம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : அமைதி, நிறைவு

கன்னி : பணம், பரிசு

துலாம் : பகை, எதிர்ப்பு

விருச்சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : லாபம், லஷ்மீகரம்

மகரம் : தனம், சம்பந்து

கும்பம் : செலவு, விரயம்

மீனம் : திறமை, முன்னேற்றம்

மார்கழி திருப்பாவை 24ம் நாள் மார்கழி உற்சவம் அன்றுவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி இங்குயாம் வந்தோம் இரங்கோலோ ரெம்பாவாய் “பொருளுரை – மகாபலியிடம் மூவடி மண்கேட்டு விஸ்வரூபம் எடுத்து மூவுலகங்களையும் அளந்தவனே உன்திருவடிகளை போற்றுகின்றேன். இராவணன் இருக்கும் தென்திசை சென்று இலங்கையில் ராட்சதர்களை அளித்தவனே. உன்திறமையை போற்றுகின்றேன். சகடாசுரன் மடியும்படி உதைத்த உன்புகழ் வாழ்க. கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை எறிதடியாக வதைத்து கபித்தாசுரன் மேல் வீசிய உன்திருவடிகளை போற்றுகின்றேன். கோவர்த்தன கிரியை குடையாகப் பிடைத்து கோகுலத்தை காத்த உனது குணம் வாழ்க பகைவர்களை அழிக்கும் உன் கையில் வேல்வாழ்க உன் வீரச்செயல்களை பாடுகின்றோம். எங்களிடம் நீ இரக்கம் காட்ட வேண்டும்.

செவ்வாய், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள் – சிவப்பு, நீலம்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)