08.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-01-08 07:36:20

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி காலை 8.22 வரை. அதன்மேல் சதுர்த்தசிதிதி. கேட்டை நட்சத்திரம் பகல் 10.13 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த் தசி. மரண யோகம் பகல் 10.13 வரை. அதன் மேல் அமிர்தயோகம். கேட்டை நட்சத்திரம். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள் காலை 9.15 – 10.15. மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30. குளிகைகாலம் 7.30 – 9.00. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்). பகல் 12.37க்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து சிம்மராசிக்கும் கேது பகவான் மீனராசியிலிருந்து கும்பராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

மேடம் : நஷ்டம், விரயம்

இடபம் : சங்கடம், தொல்லை

மிதுனம் : யோகம், அதிர்ஷ்டம்

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : திறமை, முன்னேற்றம்

கன்னி : சந்தோஷம், மகிழ்ச்சி

துலாம் : அமைதி, தெளிவு

விருச்சிகம் : நஷ்டம், கவலை

தனுசு : பொறுமை, அமைதி

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : வாழ்வு, வளம்

மீனம் : தடை, தாமதம்

நாளை சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு மாலை தெஹி வளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் உற்சவம். அதிகாலை மார்கழி திருப்பாவை உற்சவம். திருப்பாவை 23ஆம் பாசுரம். “மாசிமலை முழைஞ்சில் மன்னிக் கிடத்துறங்கும் காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்” உரை மழைக் காலத்தில் மலைக் குகையில் படுத்துறங்கும் பெருமையுடைய சிங்கம் உறக்கம் விட்டெழுந்து நெருப்புப் பொறி பறக்க விழித்து தனது மணமுள்ள முடிகள் சிலிர்த்து, நாலாபக்கம் புடை பெயர்ந்து உடம்பை உதறி கர்வத்துடன் நிமிர்ந்து கர்ஜித்து குகையிலிருந்து வெளிவருவது போல் காயம்பு நிறத்தவனே உனது இருப்பிடத்திலிருந்து எழுந்தருளி நாமிருக்கின்ற இடத்திற்கு வந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆலோசித்து அருள் புரிய வேண்டும்.

சனி, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5, 6

பொருந்தா எண்கள் : 8, 2, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள் : கருப்பு, சிவப்பு