07.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 22ம் நாள் வியாழக்கிழமை.

Published on 2016-01-07 10:02:15

சுபயோகம்

07.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 22ம் நாள் வியாழக்கிழமை.

கிருஷ்ணபட்ச துவாதசி திதி காலை 7.39 வரை. அதன்மேல் திரயோதசி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை 9.01 வரை பின்னர் கேட்டை நட்சத்திரம் சிரார்த்த திதி. தேய்பிறை திரயோதசி. சித்தயோகம் சமநோக்குநாள் சந்திராஷ்ட நட்சத்திரம் கார்த்திகை பிரதோஷ விரதம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45 ராகுகாலம் 1.30 – 3.00 குளிகைகாலம் 9.00 – 10.30. வாரசூலம் தெற்கு (பரிகாரம்– தைலம்)

மேடம் : தடை, இடையூறு

இடபம் : லாபம், ஆதாயம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : உழைப்பு, உயர்வு

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : பேராசை, நஷ்டம்

துலாம் : விவேகம், வெற்றி

விருச்சிகம் : கவனம், எச்சரிக்கை

தனுசு : தோல்வி, கவலை

மகரம் : புகழ், சாதனை

கும்பம் : சோர்வு, அசதி

மீனம் : முயற்சி, முன்னேற்றம்

திருப்பாவை 22 “அங்கண் மாஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே” உரை அழகிய விசாலமான உலகத்தை அரசாண்டவர்களும் நான் வேந்தன் என்று புறப்பற்று நீங்கி நீ தூங்கும் மஞ்சத்துக்கு அருகில் திரள்திரளாக நிற்பர். ஆய்ச்சியரான நாங்களோ உன் குணங்களுக்கு அடிமையாகி உன்னருகில் வந்துள்ளோம். கொலுசில் உள்ள சிறுமணியைப் போல் மலர்ந்த தாமரையைப் போல் சிவந்த விழிகள் எங்களைப் பார்க்காதா? சந்திரனைப் போல் குளிர்ச்சியும் சூரியனைப் போல் பிரகாசமும் ஒரு சேரத் தோன்றியது போல் விளங்கும் உன் அழகில் கண்கள் இரண்டையும் கொண்டு எங்களை கடாட்சித்தால் எங்கள் துன்பங்கள் நீங்கிவிடும். (ஆண்டாள் திருவடிகளே சரணம்). தொண்டரடிப் பொடியாழ்வார் திருநட்சத்திரம். அருளிய பிரபந்தங்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி.

கேது, சனிக் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  வெளிர் மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)