கார்த்­திகை மூன்றாம் சோம­வாரம்

Published on 2016-12-05 08:50:24

05.12. 2016 துர்முகி வருடம் கார்த்திகை 

மாதம் 20ஆம் நாள் திங்கட்கிழமை

சுக்­கில பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 11.25 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம். காலை 8.18 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை சஷ்டி. அமிர்த சித்த யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: ஆயில்யம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00. வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்). வளர்­பிறை சுப முகூர்த்தம். கார்த்­திகை மூன்றாம் சோம­வாரம். சுக்கில பட்ச விரதம்.

மேடம் புகழ், பெருமை

இடபம் தெளிவு, அமைதி

மிதுனம்         நட்பு, உதவி

கடகம் யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் லாபம், லக் ஷ்மிகரம்

கன்னி களிப்பு, மகிழ்ச்சி

துலாம் சோர்வு, அசதி

விருச்சிகம் அன்பு, இரக்கம்

தனுசு குழப்பம், சஞ்சலம்

மகரம் வரவு, லாபம்

கும்பம் நன்மை, யோகம்

மீனம் புகழ், பாராட்டு

இன்று அவிட்டம் நட்­சத்­திரம். அத்­வரன், அநலன், அநிலன், ஆபன், சோமன், துருவன், பிரத்­யூஷன், பிர­பாஷன் ஆகிய அஷ்ட வசுக்கள் இந்­நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். முதன்மை தெய்­வங்­க­ளாலும் நைருதி, வருணன், வாயு, குபேரன், ஈஸாலன் போன்ற திக்­பா­ல­கர்­க­ளாலும் சப்­த­ரி­ஷி­க­ளாலும் அஷ்ட வசுக்­க­ளாலும் சப்த கன்­னி­யர்­க­ளாலும் சன­காதி முனி­வர்­க­ளாலும் நவக்­கி­ர­கங்­க­ளாலும் நவ­துர்க்­கை­யாலும் நார­தாதி தேவ­ரி­ஷி­க­ளாலும் வணங்கப் பெறும் அனந்த சயன பத்­ம­நாபப் பெரு­மாளை இன்று வழி­படல் நன்று.

("கடவுள் எங்கும் நிறைந்­தி­ருக்க முடி­யாது என்­ப­தற்­கா­கவே தாய்­மார்­களை அவர் படைத்­துள்ளார்"– ஜார்ஜ் எலியட்)

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று, அதிர்ஷ்ட எண்கள்:  5 – 1 பொருந்தா எண்:   8  அதிர்ஷ்ட வர்ணம்:  மஞ்சள், நீலம், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)