06.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 21ம் நாள் புதன் கிழமை.

2016-01-06 07:47:04

சுபயோகம்

06.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 21ம் நாள் புதன் கிழமை.

கிருஷ்ணபட்ச துவாதசி திதி நாள் முழுவதும். விசாகம் நட்சத்திரம் காலை 7.23 வரை. பின்னர் அனுஷம் சிரார்த்த திதி. தேய்பிறை துவாதசி. சித்தியோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி சுபநேரங்கள் காலை 9.15 – 10.15 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 12.00 – 1.30 எமகண்டம் 7.30 – 9.00 குளிகைகாலம் 10.30 – 12.00. வாரசூலம் வடக்கு (பரிகாரம்– பால்)

மேடம் : புகழ், பெருமை

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம் : பிரயாணம், அலைச்சல்

கடகம் : குழப்பம், சஞ்சலம்

சிம்மம் : ஜெயம், புகழ்

கன்னி : பணம், பரிசு

துலாம் : பெருமை, செல்வாக்கு

விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : பரிவு, பாசம்

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : சினம், பகை

மீனம் : உயர்வு, மேன்மை

மார்கழி உற்சவம் திருப்பாவை நோன்பு 21ம் நாள். “ஏற்றகலங்கள் எதிர் பொங்கி மீ தளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்” உரை – பால் கறக்கும் பாத்திரங்கள் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பாலைச் சொரியும் வள்ளலான பெரும்பசுக்களை அதிகமாகக் கொண்ட நந்தகோபரின் செல்வளே எழுந்திரு. வேதங்களின் ஊற்றே விஸ்வ ரூபம் எடுத்தவளே. பல அவதாரங்கள் எடுத்த ஜோதியே உறக்கம் விட்டு விழித்துக் கொள். பகைவர்கள் உன்னோடு போரிட பலம் குன்றி எதிர்த்து நிற்க முடியாமல் உன் வாசலில் வந்து உன்திருவடிகளை வணங்குவதைப் போல் நாங்களும் உன்புகழ்பாடி உன்வாசலில் நிற்கின்றோம். (ஆண்டாள் திருவடிகளே சரணம்)

சுக்கிரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 2

பொருந்தா எண்கள்: 3, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  நீலம், சிவப்பு

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right