05.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

Published on 2016-01-05 09:30:45

கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி நாள் முழுவதும். பின்னர் துவாதசி திதி. விசாகம் நட்சத்திரம் நாள் முழுவதும் சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. மரண யோகம் திதி, நட்சத்திர திரிதியை பிருக். கிருஸ்ணபட்ச ஸர்வ ஏகாதசி மரண யோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டமம் அஸ்வினி. சுபநேரங்கள் காலை 7.45 – 8.45 பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30 குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம் வடக்கு (பரிகாரம் – பால்)

மேடம் : அனுகூலம், காரியசித்தி

இடபம் : பாராட்டு, புகழ்

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : பாசம், அன்பு

துலாம் : நலம், ஆரோக்கியம்

விருச்சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : வரவு, லாபம்

மகரம் : லாபம், லஷ்மீகரம்

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : அன்பு, பாசம்

கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதம் மார்கழி உற்சவம் திருப்பாவை 20 ஆம் பாசுரம் “முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்” பொருள்: முப்பத்து  முக்கோடி தேவர்களுக்கும் எட்டு வசுக்கள் பதினோரு ருத்திரர்கள் பன்னிரெண்டு ஆதித்யர்கள் அஸ்வினி தேவர் இருவர் இவர்களுக்கு துன்பம் வருமுன்யே அவர்கள் நடுக்கத்தை போக்கும் ரட்சகனே! நித்திரை நீங்கி எழுவாய். பக்தர்களைக் காப்பவனே தீயோரை அழிக்கும் வலிமையுடையவனே. பகைவர்களுக்கு துக்கத்தை கொடுக்கும் விமலனே தூக்கத்தில் இருந்து எழுவாயாக. செம்புகலசம் போன்ற மென்மையான தனங்களையும் சிவந்த இதழ்களைக் கொண்ட வாயையும் சிறிய இடையையும் கொண்ட திருமகளைப் போன்ற நப்பினைப் பிராட்டியே உறக்கம் நீங்கி எழுந்திரு நோன்புக்கு வேண்டிய விசிறி, கண்ணாடி முதலியவற்றைக் கொடுத்து இப்போதே உன் கணவனோடு எங்களை நீராட அனுப்புவாயாக. (ஆண்டாள் திருவடிகளே சரணம்) புதன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்:  9

பொருந்தா எண்கள்:  8 –3

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  பச்சை, சிவப்பு, நீலம்

இராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)