03.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
03.01.2016 மன்மத வருடம் மார்கழி மாதம் 18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
கிருஷ்ணபட்ச நவமி திதி பின்னிரவு 2.57 வரை அதன் மேல் தசமி திதி சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 1.56 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை நவமி சித்தி யோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி உத்திரட்டாதி சுபநேரங்கள் காலை 7.45 – 8.45 மாலை 3.15 – 4.15. ராகுகாலம் 4.30 – 6.00. எமகண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் : அன்பு, இரக்கம்
இடபம் : அன்பு, ஆதரவு
மிதுனம் : நிறைவு, பூர்த்தி
கடகம் : தனம், லாபம்
சிம்மம் : பாசம், இரக்கம்
கன்னி : பக்தி, ஆசி
துலாம் : அமைதி, பிரிதி
விருச்சிகம் : பணம், பரிசு
தனுசு : லாபம், லஷ்மீகரம்
மகரம் : செலவு, விரயம்
கும்பம் : திறமை, ஆர்வம்
மீனம் : புகழ், செல்வாக்கு
மார்கழி உற்சவம் திருப்பாவை 18ம் பாசுரம் “உந்து மத களிற்றன் ஓடாத தோள்வளியன்” உரை – மதநீர்பெருகின்றன யானையை உடையனும், யுத்தத்தில் பின்வாங்காத தோள் வலிமை கொண்டனுமான நந்தகோபரது மருமகளான நம்பிள்ளையே வாசனை வீசும் கூந்தலை யுடையவளே கதவைத்திற எல்லா இடத்திலும் கோழிகள் கூவுவதைப் பார். பந்து விளையாட்டில் கண்ணனைத் தோற்கடித்தவளே! உன்கணவன் புகழைப் பாட வந்திருக்கின்றோம். உன்செந்தாமரைக் கையில் சீராக அடுக்கியிருக்கும் வகையில் சப்தமிட மகிழ்ச்சியோடு வந்து கதவைத் திறந்துவிட (ஆண்டாள் திருவடிகளே சரணம்)
குரு ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9
பொருந்தா எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், வெளிர் நீலம்