02.09.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-09-02 07:49:58

சுக்கிலபட்ச பிரதமை திதி மாலை 3.54 வரை. அதன்மேல் துவிதியை திதி பூரம் நட்சத்திரம் பகல் 1.36 வரை. பின்னர் உத்திரம் நட்சத்திரம், சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை, சித்தயோகம். கீழ்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15. மாலை 4.45 – 5.45, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் வெல்லம்) 

இஷ்டி காலம் இன்று. சந்திர தரிசனம். பாத்ரபத மாதம் ஆரம்பம்.

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: பகை, விரோதம்

மிதுனம்: தனம், சம்பத்து

கடகம்: வரவு, லாபம்

சிம்மம்: யோகம், அதிர்ஷ்டம்

கன்னி: நன்மை, மேன்மை

துலாம்: ஆதாயம், முன்னேற்றம்

விருச்சிகம்: பிரயாணம், அலைச்சல்

தனுசு: சுகம், ஆரோக்கியம்

மகரம்: வெற்றி, செல்வாக்கு

கும்பம்: கவலை, கஷ்டம்

மீனம்: தடை, தாமதம்

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழி பாசுரம் “மனம் அகம் மலம் அற மலர் மிசை எழும் மனம் உணர் வளவிலன் பொறி உணர்வலை இலன்." பொருளுரை: மனதின் அசுத்தங்கள் எல்லாம் போய் பின்னர் ஞானம் மலர்ந்து. மேலே எழுகின்ற யோக ஞானத்தால் அவனைப் பூரணமாக உணர்ந்து விட முடியாது. ஐம்புலன்களால் அறிந்து கொள்ளும் உலகத்துப் பொருட்களாக அவனை எளிதில் தீர்மானிக்க வேண்டாம். பரிபூரண ஞான ஜோதியானவன் எம் துவாரகா நாயகன். எதிர், நிகழ், இறப்பு என்கிற மூன்று காலங்களிலும் அவனுக்கு ஒப்பான தெய்வம் கிடையாது. இவனே எனது உயிர் ஆகின்றான். (நம்மாழ்வார் திருவடிகளே சரணம்)

(“சிரிப்பு என்பது பக்க விளைவுகள் இல்லாத போதைமருந்து”)

சந்திரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1, 5, 6, 7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)