31.08.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 15ஆம் நாள் புதன்­கிழமை

Published on 2016-08-31 09:09:26

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி மாலை 3.00 மணி வரை. அதன்மேல் அமா­வாைஸ திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பகல் 11.31 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்­தசி. சித்­த­யோகம். கீழ் நோக்கு நாள். சந்­தி­ரா­டம் நட்­சத்­தி­ரங்கள் பூராடம் உத்­திராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30 – 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் – வடக்கு. (பரி­காரம்– பால்) போதா­யன அமா­வாஸ்யை இளையான் குடி­மாறர் நாயனார் குரு­பூஜை.

மேடம் முயற்சி, முன்­னேற்றம்

இடபம் நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் பக்தி, ஆசி

கடகம் ஆரோக்­கியம், நலம்

சிம்மம் கோபம், சினம்

கன்னி சிக்கல், சங்­கடம்

துலாம் பணிவு, பாசம்

விருச்­சிகம் நலம், ஆரோக்­கியம்

தனுசு நட்பு, உதவி

மகரம் கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் நேர்மை, செல்­வாக்கு

மீனம் உற்­சாகம், மகிழ்ச்சி

நம்­மாழ்வார் அரு­ளிய முதற்­பத்து மூன்றாம் திருவாய் மொழி பாசுரம் “ஒழிவு இல் கால­மெலாம் உடனால் மன்னி வழு­விலா அடிமை செய்ய வேண்டும் நாம். தெழி குரல் அருவித் திருவேல் கடந்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்­தைக்கே” பொரு­ளுரை – அழ­கான ஒளி­யுடன் மிகுந்த இரைச்சல் கொண்ட அரு­விகள் உடைய திரு­வேங்­க­ட­ம­லையில் அருள்­பு­ரியும் ஸ்ரீவேங்­க­டே­ச­னுக்கு என் தந்­தையால் தந்­தைக்கு தந்­தையாய் இடை­வெளி விடாமல் கால­மெல்லாம் உட­னி­ருந்த குறை­வில்­லாத கைங்­கர்யம் செய்ய வேண்டும். இத­னையே ஆண்­டாளும் எற்­றைக்கும் ஏழ்ஏழ் பிற­விக்கும் உன்­தன்­னோடு உற்­றோ­மே­யாவோம். உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று பகவத் கைங்­கர்­யத்தை சிறப்­பித்தார். (நம்­மாழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“மலை அளவு சொல்லை விட கடு­க­ளவு செயல் சிறந்­தது.”காந்­திஜி) ராகு, குரு, ஆதிக்கம் கொண்ட இன்று அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9, 3 பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள் இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)