28.08.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

Published on 2016-08-28 09:06:50

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி மாலை 5.25 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் பகல் 12.00 மணி வரை. பின்னர் புனர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள்.சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுசம், கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, 10.45 –11.45. மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம்.

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : அமைதி, சாந்தம்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : பிணி, பீடை

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : உற்­சாகம், மகிழ்ச்சி

கும்பம் : தடை, இடை­யூறு

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

பெரி­யாழ்வார் திரு­வாய்­மொழி கண்ணன் தாலாட்டு பாசுரம் “மெய்­திமிரும் நானப் பொடி­யோடு மஞ்­சளும் செய்ய தடங்­கண்­ணுக்கு அஞ்­ச­னமும் சிந்­த­தூ­ரமும் வெய்ய கலைப்­பாகி கொண்டு உவலாய் நின்றாள். ஐயா! அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணை­யானே தாலேலோ! பொரு­ளுரை: ஆன்­மானை வாக­னமாய் கொண்ட பார்­வ­தி­தேவி உனக்கு பூசிக்­கு­ளிக்க கஸ்­தூரி, சந்­தனம், வாசனைப் பொடியும், உன் அழ­கிய கண்­க­ளுக்கு ஏற்ற மையையும் திரு­நெற்­றியில் இட சிந்­தூ­ரத்­தையும் எடுத்துக் கொண்டு மற்­றவர் நடுவே நிற்­கின்றாள் ஐயனே! திரு­வ­ரங்­கத்தில் ஆதி­சேஷன் மேல் பள்ளி கொண்­ட­வனே! அழாமல் இருப்பாய் உன்னைத் தாலாட்­டு­கின்றேன். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

சூரியன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 8, 2

அதிர்ஷ்ட வர்ணம் : மஞ்சள் வர்ணம்