27.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 11 ஆம் நாள் சனிக்கிழமை

Published on 2016-08-27 10:00:28

கிருஷ்ணபட்ச தசமி திதி முன்னிரவு 7.03 வரை. அதன்மேல் ஏகாதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 12.58 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. சித்த யோகம். சம நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் காலை 7.45 – 8.45, 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45 ராகு காலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) சனிபகவான் சிறப்பு ஆராதனை நாள். 

மேடம்: பொறுமை, அமைதி

இடபம்: நிறைவு, பூர்த்தி

மிதுனம்: அன்பு, பாசம்

கடகம்: உயர்வு, மேன்மை

சிம்மம்: விவேகம், வெற்றி

கன்னி: காரியசித்தி, அனுகூலம்

துலாம்: அமைதி, தெளிவு

விருச்சிகம்: அன்பு, ஆதரவு

தனுசு: சிரமம், தடை

மகரம்: அசதி, வருத்தம்

கும்பம்: உயர்வு, மேன்மை

மீனம்: மகிழச்சி, சந்தோஷம்

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருவாய் மொழி – முதல் பத்து. நான்காம் திருமொழி பாசுரம் “கச்சொடு பொற்சுரிகை காம்பு கனக வளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிறை பொற்பூ அச்சுதனுக் கென்று அவணியாள் போத்தந்தாள். நச்சு முலையுண்டாய்! தாலேலோ! நாராயணா! அழேல் தாலேலோ!” பொருளுரை: பூமாதேவி ஆடையின் மேல் கட்டகச்சையும் பொற் பிடிபோட்ட உடை வாளையும் கரைகட்டிய ஆடையையும் தங்க வளையல்களையும் தலையில் அணியும் நவரத்தினச் சுட்டியையும் தங்கப்பூக்களையும் அச்சுதனான உனக்கு அனுப்பி உள்ளாள். பூதனையின் நஞ்சு பூசப் பெற்ற முலைப்பாலைக் குடித்தவனே! நாராயணா! அழாமல் இரு உன்னை தாலாட்டுகிறேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“இன்பமும் துன்பமும் பெறுவதில் இல்லை கொடுப்பதில் தான் இருக்கிறது”)

செவ்வாய், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 8,2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)