26.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-08-26 07:33:35

கிருஷ்ணபட்ச நவமி திதி முன்னிரவு 8.58 வரை. அதன்மேல் தசமி திதி ரோகினி நட்சத்திரம் பகல் 2.12 வரை. பின்னர் மிருக சீரிஷம் சிரார்த்த திதி தேய்பிறை நவமி மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி விசாகம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் –  மேற்கு (பரிகாரம் – வெல்லம்) ஸ்ரீபாஞ்சராத்ர ஜெயந்தி சனிபகவான் ஜெயந்தி, உறியடி உற்சவம்.

மேடம்: புகழ், பெருமை

இடபம்: வெற்றி, யோகம்

மிதுனம்: போட்டி, ஜெயம்

கடகம்: கீர்த்தி, புகழ்

சிம்மம்: தனம், சம்பத்து

கன்னி: அமைதி, தெளிவு

துலாம்: நட்பு, உதவி

விருச்சிகம்: லாபம், லஷ்மீகரம்

தனுசு: நன்மை, யோகம்

மகரம்: தடை, தாமதம்

கும்பம்: முயற்சி, முன்னேற்றம்

மீனம்: உயர்வு, மேன்மை

பெரியாழ்வார் அருளிச் செய்த முதல்பத்து நான்காம் திருவாய் மொழி “கண்ணன் தாலாட்டு” பாசுரம்: காணா நறுந்துழாய் கை செய்த கண்ணியும் வானார். செழுஞ் சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர் மேல் திருமங்கை போத்தந்தாள். கோனே அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே! தாலேலோ! பொருளுரை: தேன் கொண்ட தாமரை மலர்மேல் வாழும் திருமகள் காட்டில் தோன்றிய மணமுள்ள துளசியைக் கொண்டு கட்டிட மாலையையும் வானுலகில் உள்ள கற்பக மலரினால் தொடுத்த திருநெற்றி மாலையையும் அனுப்பி இருக்கிறாள். கோணர் குலத்தில் வளர்ப்பவனே! அழாமல் இரு! உன்னை தாலாட்டுகிறேன். கும்பகோணத்தில் பள்ளி கொண்டிருப்பவனே அழாமலிரு (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“சிரமமின்றி நாம் அடைவது நீடித்து இருப்பதில்லை”)

சனி, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ்சள், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)