25.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 9 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-08-25 07:43:54

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி முன்னிரவு 11.08 வரை. அதன்மேல் நவமி திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 3.39 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி. மரண யோகம். கரிநாள், சுபம் விலக்குக. கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் காலை 10.45 – 11.45, பிற்பகல் 12.15 – 1.15, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார சூலம் – தெற்கு (பரிகாரம்– தைலம்) இன்று ஆவணி ரோகிணி அஷ்டமி. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கோகுலஷ்டமி.  

மேடம்: வெற்றி, யோகம்

இடபம்: போட்டி, ஜெயம்

மிதுனம்: தடை , இடையூறு

கடகம்: செலவு, பற்றாக்குறை

சிம்மம்: புகழ், பெருமை

கன்னி: அமைதி, தெளிவு

துலாம்: வரவு, லாபம்

விருச்சிகம்: பயம், பகை

தனுசு: நன்மை, அதிர்ஷ்டம் 

மகரம்: ஆசை, நஷ்டம்

கும்பம்: மகிழ்ச்சி, சந்தோஷம்

மீனம்: பகை, விரோதம்

பெரியாழ்வார் அருளிய முதற்பத்து, நான்காம் திருமொழி கண்ணன் தாலாட்டு. பாசுரம்: “ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் சாதிப்பவளமும் சந்தச் சரிவளையும் மாதக்க என்று வருணன் விடு தந்தான் சோதிச் சுடர் முடியாய் தாலேலோ! சுத்தரத் தோளனே தாலேலோ! பொருளுரை: வருணன் பிரகாசமான கடல் முத்துக்களிலான முத்தாரமும் சிறந்த சாதி பவளத்திலான முன்கை சரிவளையம் உனக்கு அழகாய் இருக்குமென்று கொண்டுவந்துள்ளான். மிகுந்த ஒளியைத் தரும் முடியை உடையவனே அழகிய தோள்கள் உடையவனே உன்னைத் தாலாட்டுகிறேன்.  (பெரியாழ்வார் திருவடிகளே சரணம்)

(“இளமை அழகான ஒரு முகத்தை பெற்றிருக்கிறது. முதுமை அழகான ஓர் ஆன்மாவைப் பெற்றிருக்கிறது.”)

கேது, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2 – 6

பொருந்தா எண்கள்: 7, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ்சள், அடர் பச்சை.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)