24.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 8 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-08-24 07:55:52

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி. பின்னிரவு 1.29 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. பரணி நட்சத்திரம். மாலை 5.14 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி. சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் காலை 10.45– 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) இன்று கிருஷ்ண ஜெயந்தி. 

மேடம்: உயர்வு, மேன்மை

இடபம்: அன்பு, இரக்கம்

மிதுனம்: அமைதி, சாந்தி

கடகம்: முயற்சி, முன்னேற்றம்

சிம்மம்: உயர்வு, ஊக்கம்

கன்னி: களிப்பு, மகிழ்ச்சி

துலாம்: நட்பு, உதவி

விருச்சிகம்: லாபம், லக் ஷ்மீகரம்

தனுசு: செலவு, விரயம் 

மகரம்: பணம், பரிசு

கும்பம்: உயர்வு, மேன்மை

மீனம்: உயர்வு, உழைப்பு

பெரியாழ்வார் அருளிய முதற்பத்து, நான்காம் திருவாய்மொழி பாசுரம். “எழிலார் திருமார்வுக்கு ஏற்றம் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையான் வயிச்சிரவணன். தொழுது உவனாய் நின்றான். தாலேலோ! தூமணி வண்ணனே! தாலேலோ!” பொருளுரை; குற்றமற்ற கொடையாளியான குபேரன் அழகான உன் திருமார்புக்கு பொருத்தமான அழகிய சங்கு, சக்கரம், வில், வாள், கதை இவற்றின் வடிவில் கண்ணேறு வாராதிருக்க ஐம்படை தாலியும் ஆரமும் எடுத்துக் கொண்டு வெகு தூரத்திலோ மிக அருகிலோ இராமல் நடுவில் நின்று தொழுது கொண்டிருக்கின்றான். குற்றமற்ற நீலமணி நிறத்தவனே! உன்னைத் தாலாட்டுகின்றேன்.

(ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்: 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம் 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)