26.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 10 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2015-12-26 10:15:40

26.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 10 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச பிர­தமை திதி மாலை 4.45 வரை. அதன் மேல் துவி­தியை திதி திரு­வா­திரை நட்­சத்­திரம் பகல் 1.01. வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. சித்­த­யோகம். மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம் கேட்டை சுப­நே­ரங்கள் காலை 7.45– 8.45, பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்)

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : சுகம், ஆரோக்கியம்

மிதுனம் : அன்பு ஆதரவு

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : சிக்கல், கவலை

கன்னி : விரயம், செலவு

துலாம் : ஊக்கம், உயர்வு

விருச்சிகம் : லாபம், லஷ்மீகரம்

தனுசு : அன்பு, ஆதரவு

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : அன்பு, பாசம்

பாஸ்சிர பகுன பிரதமை பருவ பிர­தமை. திருப்­பாவை நோன்பு பாசுரம் பத்து. “நோற்று சுவர்க்கம் புகு­கின்ற அம்­மானாய்” உரை: கண்­ணனை பூஜிக்க முற்­பி­ற­வியல் தவம் செய்து இப்­போது சுகமாய் உறங்கும் தலை­வியே வாசல் கதவை திறக்க முடி­யாது போனால் பதி­லா­வது சொல்லக் கூடாதா? வாச­னை­யுள்ள துள­சியை முடியில் அணிந்த நாரா­ய­ணனை நாம் வழி­பட்டால் நாம் வேண்­டிய வரத்தை அருள்வான். முன்னர் கால­னிடம் அகப்­பட்ட கும்­ப­கர்ணன் உன்­னிடம் தோற்று உனக்கு வெகு­ம­தி­யாக நீண்ட உறக்­கத்தை அளித்­தானோ மிகுந்த சோம்பல் உடை­ய­வளே. அரு­மை­யான ஆப­ரணம் போன்­ற­வளே கண்­களைத் துடைத்துக் கொண்டு தெளி­வுடன் எழுந்து வந்து கதவைத் திறப்­பா­யாக. (ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம்)

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்