15.07.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-07-15 11:55:52

சுக்கில பட்ச ஏகாதசி விரதம். பின்னிரவு 2.34 வரை. அதன் மேல் துவாதசி திதி. விசாகம் நட்சத்திரம் காலை 10.32 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்தியோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்வினி. சுபநேரம் காலை 9.15௲ 10.15, மாலை 4.45 ௲ 5.45. ராகுகாலம் 10.30 ௲ 12.00, எமகண்டம் 3.00௲ 4.30, குளிகைகாலம் 7.30௲ 9.00, வாரசூலம்௲ மேற்கு (பரிகாரம் ௲ வெல்லம்) இன்று சுக்கில பட்ச ஏகாதசி விரதம். இதற்கு விஷ்னு சயன ஏகாதசி என்று பெயர். கோவர்த்தன விரதம் உபவாசமிருந்து விஷ்னு பகவானை வழிபடல் நன்று. நாளை ஆடிப்பிறப்பு. சாதூர் மாத விரதாரம்பம்.  

மேடம்: நிறைவு, பூர்த்தி

இடபம்: உயர்வு, மேன்மை

மிதுனம்: ஆதாயம், இலாபம்

கடகம்: அசதி, வருத்தம்

சிம்மம்: நற்செயல், பாராட்டு

கன்னி: உயர்வு, மேன்மை

துலாம்: வரவு, இலாபம்

விருச்சிகம்: ஆதாயம், இலாபம்

தனுசு: காரியசித்தி, அனுகூலம்

மகரம்: நட்பு, உதவி

கும்பம்: நஷ்டம், கவலை

மீனம்: ஜெயம், புகழ்

திருச்சந்தவிருத்தம் பாசுரம் “கரும்பரங்கு தண்துழாய் துதைந்தலர்ந்தபாதமே கரும்பிருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!” பொருளுரை: எல்லா பகுதியிலும் கரும்புபோல் இனிப்பாக இருக்கும் வெல்லக்கட்டியே! திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட அச்சுதனே. இரும்புபோல் வலிமையுடைய அரக்கர்களைக் கொன்ற கோதண்டராமா! வண்டுகள் மொய்த்திருக்கும் துளசி மாலையணிந்த துவாரகா கண்ணனே, ரங்கநாதா! உன் திருவடிகளை விரும்பி வழிபடும் எனக்கு உன் மனம் இரங்க வேண்டும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“குட்டிப்பூனைகளோடு விளையாடும் போது தாய்ப்பூனையும் தடுமாறி விழும்”)

சுக்கிரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

பொருந்தா எண்கள்: 3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)