நவராத்திரி விரதம் 21 இல் ஆரம்பம்

Published on 2017-09-18 09:47:02

அமா­வாசை சேர்ந்த பிர­தமை தின­மான 20 ஆம் திகதி புதன்­கி­ழமை நவ­ராத்­திரி விர­தத்தை ஆரம்­பிக்க முடி­யாது. 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை திருக்­க­ணித பஞ்­சாங்­கப்­படி மு.ப. 10.35 வரையும் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி மு.ப. 11.02 வரையும் பிர­தமை திதியில் அதா­வது ஆஸ்­வி­ஜ­சுத்தப் பிர­தமை உள்­ளதால் 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மையே கும்­பஸ்­தா­பனம் செய்து நவ­ராத்­திரி விர­தத்தை ஆரம்­பிக்க முடியும் என இந்து கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் விளக்­க­ம­ளித்­துள்­ளது.

இவ்­வி­டயம் தொடர்­பாக திணைக்­களம் உரிய தரப்­பி­னர்­க­ளது ஆலோ­ச­னை­களை பெற்­றுக்­கொண்டு பின்­வரும் விப­ரங்­களை மக்­க­ளுக்கு அறி­விப்­ப­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அ. உமா­ம­கேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இவ்­வ­ருட நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிக்கும் தினம் தொடர்­பாக வாக்­கிய பஞ்­சாங்கம் மற்றும் திருக்­க­ணித பஞ்­சாங்கம் என்­பவை முறையே 20.09.2017 புதன்கிழமை மற்றும் 21.09.2017 வியா­ழக்­கி­ழமை என இரு­வேறு தினங்­களை குறிப்­பிட்­டுள்­ள­தனால் இந்து மக்கள் மத்­தியில் நவ­ராத்­திரி ஆரம்­பிக்கும் தினம் தொடர்­பாக குழப்ப நிலை உரு­வா­கி­யுள்­ளது.

நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிப்­பதை நிர்­ண­யிக்கும் பிர­மா­ணங்­களை ஆராயும் போது சாந்­தி­ர­மாத ஆஸ்­விஜ சுத்­த­பி­ர­த­மை­யன்று நவ­ராத்­ திரி விரதம் ஆரம்­பிக்க வேண்டும். இதன் பிர­காரம் அம­ாவாசை சேராத பிர­த­மையில் நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­ வேண்டும். அம­ாவாசை சேர்ந்த பிர­த­மையில் கும்­பஸ்­தா­பனம் செய்தல் விலக்­களிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­துடன் கும்­பஸ்­தா­பனம் காலையில் செய்தல் வேண்டும் என நவ­ராத்­திரி பூஜா பத்­த­தையில் (சுப்­பி­ர­ம­ணிய சாஸ்­தி­ரிகள்) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­காரம் 20 ஆம் திகதி புதன்­கி­ழமை அம­ாவா­சை­யா­னது திருக்­க­ணித பங்­சாங்­கப்­படி மு.ப.10.59 வரையும் வாக்­கிய பஞ­்சாங்­கப்­படி மு.ப.11.23 வரையும் உள்­ளதால் அன்­றைய தினம் அமா­வாசை சேர்ந்த பிர­த­மையில் நவ­ராத்­திரி விர­தத்தை ஆரம்­பிக்க முடி­யாது. மேலும் 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை திருக்­க­ணித பஞ்­சாங்­கப்­படி மு.ப 10.35 வரையும் வாக்கிய பஞ்சாங்கப்படி மு.ப. 11.02 வரையும் பிரதமை திதியில் அதாவது ஆஸ்விஜசுத்தப் பிரதமை உள்ளதால் 21 ஆம் திகதி வியாழக்கிழமையே கும்பஸ்தாபனம் செய்து நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியும்.